Pages

Saturday, December 12, 2015

ஊர் திரும்ப முடியாமல் சவூதியில் தவித்த முதியவர் பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு !

18 மாதங்களாக ஊர் திரும்ப முடியாமல் சவூதியில் தவித்த ஆரோக்ய சாமி பீட்டர் (வயது60)இந்தியன் சோஷியல் ஃபோரம் உதவியால் மீட்பு!

புதுக்கோட்டையைச் சேர்ந்த  ஆரோக்ய சாமி பீட்டர் (வயது60)கடந்த 18மாதங்களாக வேலையில்லாமலும் காலாவதியான தனது இகாமாவை முதலாளி புதுப்பிக்காமலும் இதனால் வெளியில் நடமாட முடியாமலும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான ஆரோக்யசாமி நாடி திரும்பமுடியாமல் தவித்துள்ளார்.

முறைப்படியான விசா இல்லாமல் 18மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் ஆரோக்ய சாமி தாயகம் திரும்புவதற்கு அவரால் முடியாமல் போகவே இந்தியன் சோஷியல் ஃபோரம் அமைப்பின் உதவியை நாடினார்.

இதையறிந்த இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபார் கிளை சமூக நலத்துறை நிர்வாகிகள் அவரது பிரச்சினையை கவனத்தில் கொண்டு உடனடியாக சவூதி அரசின் காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்தின் உதவியையும் பெற்று பாதுகாப்பாக தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்
முயற்சியில் ஈடுபட்டனர்.

கோபர் கிளையின் நிர்வாகி சகோ.அப்துல் காதர் கடந்த 10.12.2015 அன்று ஆரோக்ய சாமிக்கான முறைப்படியான EXIT வெளியேற்றம் ஆணையை சவூதி அரசின் மூலம் பெற்று ஆரோக்யசாமியை பாதுகாப்பாக புதுக்கோட்டைக்கு வழியனுப்பி வைத்தார்.

இந்தியன் சோஷியல் ஃபோரம் கோபர் கிளை நிர்வாகிகளின் மனிதநேய சேவையை தேசிய துணைதலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,மாநில தலைவர் காயல் அபுபக்கர், பொதுசெயலாளர் காயல் மக்தூம் நைனா ஆகியோர் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...