Pages

Wednesday, December 9, 2015

பிலால் நகர் வெள்ளப் பகுதிகளில் ஆர்டிஓ ஆய்வு !

அதிரையில் பெய்துவரும் தொடர் கன மழையால் பிலால் நகரை ஒட்டி அமைந்துள்ள செடியன் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த தொடர் கன மழையால் செடியன் குளம் நீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான பகுதியாகிய பிலால்  நகர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. தொடர்ந்து நீர் வெளியேறி வருவதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும் சிரமங்களுடன் பிலால் நகர் சாலையை கடந்து செல்கின்றனர். குடிசைகளில் தங்கியுள்ளவர்கள் வாடகை வீட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், காவல் துறை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர், அதிரை பேரூராட்சி தலைவர், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டுக்கோட்டை ஆர்டிஓ மற்றும் அரசு அதிகாரிகள் வெள்ளப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வடிகால் வாய்க்காலை முறையாக அளவீடு செய்து, வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு வாய்காலில் உள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டது. எனினும் செடியன் குளத்திலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதால் பிலால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...