Pages

Saturday, December 12, 2015

நிறத்தை மாற்றிய அதிரை பேரூராட்சி !

அரசின் சார்பில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரும்பாலான கட்டிடங்களுக்கு குறிப்பாக மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், சுகாதார கழிவறைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசுப்படுவது கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அதிரை பேரூராட்சி சார்பில் மிலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள மோட்டார் பம்பிங் அறையை சுற்றி புதிதாக எழுப்பட்ட சுவர் மற்றும் பிற இடங்களில் உள்ள கட்டிடங்களுக்கு காவி மற்றும் வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது பொதுமக்களிடேயே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மேலத்தெரு பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் சுகாதார கழிவறையின் சுவர், கடற்கரைத்தெரு தர்ஹா அருகே புதிதாக எழுப்பட்டுள்ள சுகாதார கழிவறை, வண்டிப்பேட்டை மதுக்கூர் சாலையில் அமைந்துள்ள சமுதாய அடக்கஸ்தலம்-சுடுகாடு தடுப்பு சுவர் ஆகியவற்றில் புதிதாக காவி மற்றும் வெள்ளை நிறங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது வழக்கத்திற்கு மாறான செயல் எனவும், திடீரென நிறத்தை மாற்றி இருக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் செயலைக் கண்டு வியப்படைவதாகவும் தெரிவித்தனர்.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...