Pages

Friday, December 4, 2015

வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு SDTU வண்டிப்பேட்டை ஆட்டோ ஓட்டுனர்கள் ரூ 32,350 நிதி உதவி !

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பொதுமக்களுக்கு உதவும் வகையில், வண்டிப்பேட்டை ஆட்டோ ஓட்டுனர்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் எஸ்டிடியூ [ SDTU ] வண்டிப்பேட்டை ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் நிதி ரூ 32,350 திரட்டப்பட்டது.

இன்று வண்டிப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்டில் வெள்ள நிவாரண நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு எஸ்டிடியூ வண்டிப்பேட்டை கிளை தலைவர் சேக் முஹம்மது தலைமை வகித்தார். செயலாளர் முஹம்மது கான், பொருளாளர் வீரையன், பொறுப்பாளர்கள் ரஹ்மதுல்லா, ரிஜ்வான் அஹமது, முஹம்மது பிலால், சதாம் ஹுசைன், அப்துல் லத்திப், அப்துல் மாலிக், இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் முஹம்மது அஜார் வசம் ஒப்படைத்தனர். நிதியை பெற்றுக்கொண்ட முஹம்மது அஜார், நிதி திரட்டிய எஸ்டிடியூ வண்டிப்பேட்டை ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், நிதி வழங்கி உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...