Pages

Tuesday, January 12, 2016

2015-ன் சிறந்த 10 கட்டிடங்கள்!

சென்ற ஆண்டு உலகம் முழுவதும் ரியல் எஸ்டேட் துறைக்கு ஓரளவு உற்சாகமான ஆண்டாக இருந்தது. 2014-ம் ஆண்டின் தேக்கத்திலிருந்து மீண்டு வர இந்த ஆண்டு உதவியது. உலகம் முழுவதும் முக்கியமான கட்டிடத் திட்டங்கள் உருவாயின. உலகின் மிக உயரமான வீட்டுக் குடியிருப்புத் திட்டமான 432 பார்க் அவென்யூ சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது.

இது மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள் கடந்த ஆண்டுதான் அதிகமாகக் கட்டப்பட்டன. கனடாவில் இருந்து வெளிவரும் அஸ்சூயர் என்னும் கட்டுமானத் துறை சார்ந்த பத்திரிகை உலக அளவில் சிறந்த 10 கட்டிடங்களைப் பட்டியலிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்கள், வணிக வளாகங்கள், வீட்டுக் குடியிருப்புகள், அலுவலங்கள், சுகாதார மையங்கள் எனப் பல்வேறு வகையான கட்டிடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

கட்டுமான நேர்த்தி, பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

நியூ பார்டோ ஸ்டேடியம் (கால்பந்து மைதானம்), பிரான்ஸ்

லெடன்ஹால் பில்டிங் (வணிக வளாகம்), இங்கிலாந்து

ரயர்சன் ஸ்டூடண்ட் சென்டர் (பல்கலைக்கழகக் கட்டிடம்), கனடா

432 பார்க் அவென்யூ (அடுக்குமாடிக் குடியிருப்பு), அமெரிக்கா
லேனிங் ஹப், சிங்கப்பூர்

லேனிங் ஹப், சிங்கப்பூர்

டிம்மர்ஹுயூஸ் (அரசு வீட்டுக் குடியிருப்பு), நெதர்லாந்து

விட்னி மியூசியம் (நவீன ஒவியங்களுக்கான அருங்காட்சியகம்), அமெரிக்கா

யூரோ நியூஸ் (செய்தித் தொலைக்காட்சி அலுவலகம்), பிரான்ஸ்

கெஸ்கிகோ காலரா ட்ரீட்மெண்ட் சென்டர் (மருத்துவமனைக் கட்டிடம்), ஹெய்டி

ஆன்ஹெர்ம் சென்ட்ரல் ஸ்டேஷன் (ரயில் நிலையம்), நெதர்லாந்து

நன்றி: தி தமிழ் இந்து

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...