Pages

Thursday, January 7, 2016

உடல் நலம் பாதிப்படைந்த 3 பேரின் மருத்துவ சிகிச்சைக்காக நாளை அதிரை ஜும்மா பள்ளிகளில் நிதி திரட்டும் பணி !

உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 ஏழை சகோதரர்களின் உயர் சிகிச்சைக்கு உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் நிதி வசூல் திரட்டும் பணி நாளை நடைபெற உள்ளது. மேலும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளின் ஜும்மா தொழுகையில் நிதி திரட்டும் பணி நடைபெற இருக்கிறது.

இதில் PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில். PFI பொறுப்பாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட உள்ளனர்.

ஜும்மா பள்ளிகளில் நாளை திரட்டும் நிதி அனைத்தும் உரிய பயனாளிகளிடம் மருத்துவ சிகிச்சைக்காக மாத்திரம் ஒப்படைக்கப்படும். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தொழுகையாளிகள் தாராளமாக நிதி உதவி அளித்து உயிருக்கு போராடும் 3 சகோதரர்களின் உயர் சிகிச்சைக்கு உதவ PFI பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...