Pages

Tuesday, January 5, 2016

அதிமுகவிலிருந்து 50 குடும்பங்கள் விலகி திமுகவில் இணைந்தனர் !

அதிரை அடுத்துள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதி அதிமுக கட்சியை சேர்ந்த 50 குடும்பங்கள் இன்று திமுகவில் இணைந்தனர்.

ஏரிப்புறக்கரை ஊராட்சி பகுதியின் அதிமுக கட்சியை சேர்ந்த சங்கர், பக்கிரி, இராஜவேலு, அருமைக்கண்ணு, மனோகர், அண்ணாமலை, விஜயகுமார், ஜானகிராமன், வடிவேலு, கங்காதரன் உள்ளிட்ட  சுமார் 50 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, திமுக அதிரை பேரூர் துணை செயலாளர் தில்லை நாதன், வார்டு கவுன்சிலர் முஹம்மது செரீப், மீனவரணி பொறுப்பாளர் சுப்பிரமணி, சேதுபாவா சத்திரம் ஒன்றிய பொருளாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சேண்டாக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், திமுக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...