Pages

Friday, January 1, 2016

நைட்டி அணிந்து வீதிக்கு வந்தால், ரூ.500 அபராதம்!

நைட்டி அணிந்து பெண்கள் தெருவுக்கு வந்தால், மகாரஷ்ட்ர கிராமம் ஒன்றில், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவிமும்பை அருகேயுள்ள கோதிவலி கிராமத்தில் பெண்களுக்கு நைட்டி அணிந்து தெருவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களுக்கு  பெண்கள் அணியும் இது போன்ற உடைகளே காரணமாக இருப்பதாக கூறி நைட்டி போன்ற உடைகளுக்கு அந்த கிராமத்தை சேர்ந்த மகளிர் மன்றம் தடை விதித்துள்ளது.

நைட்டிக்கு விதிக்கப்பட்டத் தடை குறித்து கோதிவலி கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகததில் நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது, அதில் ''கோதிவலி கிராமத்தை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் கூறப்படுவதாது, இனிமேல் நைட்டி அணிந்து தெருவுக்கோ சாலைக்கோ வந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கிராமத்தை சேர்ந்த பல பெண்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவாகரத்தில் போலீசார் தலையிட வேண்டுமென்ற கோரிக்கையும் வலு பெற்றுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கிராமத்து மக்களை இது போன்று கட்டுப்படுத்த எந்த மகளிர் அமைப்புக்கும் உரிமையில்லை. கிராம பஞ்சயாத்துக்கும் உரிமையில்லை. எனவே இது போன்ற உத்தரவுகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...