Pages

Monday, January 11, 2016

பஸ்-வேன் மோதிய விபத்தில் முத்துப்பேட்டை திருமண விழாவுக்கு சென்ற 7 பேர் காயம்!

ஒரத்தநாடு அருகே பஸ்-வேன் மோதிய விபத்தில் திருமண விழாவுக்கு சென்ற 7 பேர் காயம் அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் திருச்சியில் இருந்து முத்துப்பேட்டையில் நடைபெறும் திருமண விழாவுக்கு தஞ்சை வழியாக வேனில் சென்றனர்.

வேன் ஒரத்தநாட்டை அடுத்துள்ள புலவன்காடு பஸ்நிறுத்தம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது முன்னால் சென்ற தனியார் பஸ்சின் டிரைவர் சாலையில் இருந்த வேகத்தடையை பார்த்து பஸ்சின் வேகத்தை குறைத்தார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த வேன், பஸ் மீது மோதியது. இதில் வேனில் வந்த நிஜாம்தீன் (வயது48), பைசல்கான் (38), சாகுல்அமீது(49), ஆமினா(39), சசிதாபானு(22), ரிகான்பர்விக்(23), ஷகர்பானு (45) ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுதொடர்பாக பாப்பாநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:தினத்தந்தி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...