Pages

Monday, January 11, 2016

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ 76,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகக்கூட்ட அரங்கில் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள்  தலைமையில் (11.01.2016) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை,  வீட்டு மனைப்பட்டா,  கல்விக் கடன், மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை  பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்  நேரில் அளித்தனர். இம்மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் இம்மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவி தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரமும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்ப நிவாரண தொகையாக 4 பயனாளிகளுக்கு ரூ.42 ஆயிரத்து 500க்கான காசோலைகளை, மேலும் ஒரு பயனாளிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகைக்கான காசோலையினை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

மேலும், ஒரு பயனாளிக்கு சத்துணவு மைய அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

ஆக மொத்தம் 10 நபர்களுக்கு ரூ.76 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்; (சத்துணவு) திரு.செல்வேந்திரன்,  சமூக பாதுகாப்பு நல தனி வட்டாட்சியர் திரு.எஸ்.ரவிச்சந்திரன்,  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...