Pages

Friday, January 8, 2016

மாவட்டம் முழுவதும் நாளை ( 9 ந்தேதி ) சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

தஞ்சாவூர் மாவட்டத்தினை முழு சுகாதார மாவட்டமாக திறந்த வெளிக்கழிப்பிடமற்ற மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலுடன் கூடிய வகையில் மாற்றுவதற்கான நடவடிக்கையாக 09.01.2016 அன்று மாபெரும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் ஒருங்கிணைந்து சுகாதார உறுதிமொழி ஏற்கிறார்கள்.  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்காக 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.  ஊரக பகுதிகளில் ஏறத்தாழ 16 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் பங்கேற்கிறார்கள்.

நகர்ப்புற பகுதிகளான தஞ்சாவூர் மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிகளிலும் அனைத்து மக்களும் சுகாதார உறுதிமொழி ஏற்கிறார்கள்.  நகர்ப்புற பகுதிகளில் ஏறத்தாழ 7 இலட்சத்து 20 ஆயிரம் மக்கள் பங்கேற்கிறார்கள்.

2028 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இம்மாபெரும் சுகாதார உறுதிமொழியில் பங்கேற்கிறார்கள்.  இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான கல்லூரிகள், பாலிடெக்னிக்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

மாபெரும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு தேவையான உறுதிமொழி படிவங்கள் வ.எண். படி மாவட்ட நிர்வாகத்தால் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. உறுதிமொழியில் திறந்தவெளியில் மலம் கழிப்பது தவறான கண்ணியமற்ற செயல் என்பதனை சுட்டிக்காட்டியும், சுற்றுப்புறச் சூழல் நிலை சுகாதாரமாக பேணுதல் மற்றும் பசுமையான தஞ்சாவூரை உருவாக்குதல் ஆகியவை இடம் பெறுகிறது.

சுகாதார உறுதிமொழி ஏற்கும் நிகழ்விற்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது.  ஊரகப் பகுதிகளில் 5668 இடங்களும், நகர்ப்புறபகுதிகளில் 683 இடங்களும், 2028 பள்ளி வளாகங்களிலும் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.

இந்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்விற்கு மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு அலுவலரும், மண்டல அலுவலர்களும், மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் பொறுப்பு அலுவலர்களாக செயல்படுவார்கள்.

ஊராட்சிகள் மற்றும் குக்கிராமங்களில் இந்நிகழ்வினை கண்காணிக்கும் மற்றும் நடத்தும் வகையில் ஆசிரியர்கள், உதவியாளர்கள் போன்ற நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.  அதேபோல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பல்வேறு நிலை அலுவலர்கள் இப்பணியினை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பொது மக்கள் அனைவரும் சுகாதார உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் கலந்து கொண்டு மாசில்லாத, பசுமையான மற்றும் தூய்மையான தஞ்சாவூர் உருவாக்கிட ஒருங்கிணைந்து செயல்படக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...