Pages

Sunday, January 17, 2016

கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க வலியுறுத்தி செல்போன் டவரில் வாலிபர் ஏறி தற்கொலை மிரட்டல் !

திருவர்ரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கடுவெளி சித்தாளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரும்மாள் மகன் மீனாட்சிசுந்தரம் (28). இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சங்கேந்தி கடைத்தெருவிற்கு கையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடியுடன் வந்தார். அப்பொழுது தான் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்துக் கொள்ள போகிறேன் என்று கூச்சலிட்டார். இதனைக் கண்ட பொதுமக்கள் பெரிது படுத்தாமல் அலட்சியமாக இருந்தனர். திடீரென்று அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் செல் டவரில் கொடியுடன் ஏறினார். அப்பொழுது அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். ஆனாலும் வேகமாக வாலிபர் மீனாட்சி சுந்தரம் ஏறி செல்டவர் உச்சிக்கு சென்றார்.

உடனடியாக எடையூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் போலீசார் மேல ஏறிய மீனாட்சி சுந்தரத்திடம் எதற்காக மேலே ஏறினாய்? என்று கேட்டனர். அதற்கு வாலிபர் மீனாட்சி சுந்தரம் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வந்தால்தான் காரணத்தை சொல்வேன் என்றும், யாராவது மேலே வர முயற்சித்தால் கீழே குதித்து தற்கொலை செய்துக் கொள்வதாகவும் கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வாலிபர் மீனாட்சிசுந்தரத்தின் பெற்றோர் மற்றும் சகோதர்கள், உறவினர்கள் வந்து மீனாட்சிசுத்தரத்திடம் பேசினார். அதற்கும் பதில் செல்லவில்லை. நேரம் ஆனதும் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.அருண் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தயார் நிலையில் தனியார் ஆம்புலன்சும், அரசு மருத்துவ குழுவும் நிறுத்தப்பட்டது. வாலிபரை மீட்க முத்துப்பேட்டை தீயணைப்பு படையினரும் தீயணைப்பு வண்டியுடன் காத்திருந்தனர்.  இதனால் நேரமாகி இருட்டானது.

இதனையடுத்து டவர் மீது ஏறி நின்ற மீனாட்சி சுந்தரத்திடம் போலீசார் மற்றும் உறவினர்கள் கீழே இறங்கி வரும்படி கெஞ்சிவழியுறுத்தினர். ஆனாலும் பிடிவாதமாக வாலிபர் மீனாட்சி சுந்தரம் இறங்கி வர மறுத்தார். அதன்பின்னர் இரவு சுமார் 7.30 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி, ஒன்றிய செயலாளர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து டவர் மேலே இருந்த வலிபர் மீனாட்சி சுந்தரத்திடம் தீயணைப்பு வாகனம் மீது ஏறி நின்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில் நான் இறங்கி வருகிறேன். என்ன கோரிக்கை என்பதை உங்களிடமும் பத்திரிக்கையாளரிடம் மட்டும் சொல்கிறேன். செல்போன் டவர் இருக்கும் வளாகத்திற்குள் வரும்படி கூறினார்.

இதையடுத்து செல்போன் டவர் இருக்கும் வளாகத்திற்குள் வி.சி நிர்வாகிகளும் பத்திரிக்கையாளர்கள் மட்டும் சென்றனர். பின்னர் செல் டவரிலிருந்து இறங்கி வந்த மீனாட்சிசுந்தரம் கூறுகையில்: எங்க ஊர் கடுவெளி சித்தாலத்தூரில் கள்ள சாராயம் அதிகளவில் ஆறாக ஓடுகிறது. பாண்டிச்சேரி மற்றும் வெளிமாநில சரக்குகள் அதிகளவில் இறக்கப்படுகிறது. இதனை குறிப்பிட்ட ஒரு சிலர் விற்பனை செய்கின்றனர். இது காவல் துறை உதவியுடன் நடக்கிறது.

இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது உயர் சமுதாயத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கும் காவல் துறை நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. இதைபோய் நாங்கள் காவல் துறையில் சொன்னால் எங்கள் மீது கோபம் படுகின்றனர். அதனால்தான் காவல் துறையை கண்டித்தும், தலைவர் திருமாவளவன் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காகவும் டவரில் ஏறினேன் என்று கூறிக்கொண்டிருக்கும் போது போலீசார் வாலிபர் மீனாட்சி சுந்தரத்தை சூழ்ந்து மடக்கி பிடித்துக் கொண்டு டி.எஸ்.பி.காரில் ஏற்றி ஏற்றினர். பின்னர் எடையூர் காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனிவேல் தலைமையில் வருவாய்த்துறையினரும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வாலிபர் மீனாட்சிசுந்தரத்திடம் போலீசார் அறிவுரை வழங்கி அவரிடமிருந்து எழுதி வாங்கிக் கொண்டு அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.  இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...