Pages

Thursday, January 7, 2016

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மணமக்களுக்கு மீண்டும் கவுன்சிலிங் நிகழ்ச்சி !

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 24 ஜோடி மணமக்களுக்கு கடந்த டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 3 ம் தேதி வரை திருமணம் எனும் நிக்காஹ் நடந்தது.

திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களின் குடும்ப உறவு மேம்பட மணமக்களை அழைத்து அவர்களுக்கு மார்க்க அறிஞர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக மெளலவி முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு சிறந்த சொற்பொழிவை வழங்கினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சொற்பொழிவை மணமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். மேலும் கடற்கரைதெரு ஜும்மா பள்ளி இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி அவர்கள் மணமகன்களுக்காக செக்கடி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவில் பள்ளி, கல்லூரியில் படித்த கையோடு, அல்லது அலுவலகப் பணியின் சுமைகளோடு மணமேடையில் வந்து அமரும் இன்றைய மணமக்களுக்கு, கணவன்-மனைவியின் உரிமைகள் - கடமைகள் என்ன என்பது குறித்தும், இல்லறத்தின் நெளிவு சுளிவுகள், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், உறவுகளின் அருமை ஆகியன குறித்தும், குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துவரும் திடீர் 'தலாக்', அவசர 'குலா' ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் அனைவரும் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். அதிரை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி, உறவு மேம்பட உதவும் என பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் அனைவரின் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எதிர்வரும் [ 10-01-2016 ] ஞாயிறுக்கிழமை காலை 10 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்த மணமக்களை அழைத்து மார்க்க அறிஞர்களின் இஸ்லாமிய அடிப்படையிலான வழிகாட்டுதல் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் மணமுடித்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுவரும் மணமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.   

1 comment:


  1. //திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களின் குடும்ப உறவு மேம்பட//

    Bad write-up with a bad sense! இப்படி அமையவேண்டும்:

    "திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக," என்று ஒரு கமா இட்டு, சொற்றொடர் அமைந்திருந்தால், அர்த்தம் அனர்த்தமாகி இருக்காது. நல்ல தமிழ் எழுதப் பழகுங்களப்பா!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...