Pages

Thursday, January 7, 2016

அதிரை ரெட் கிராஸ் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் !

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அதிரை கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் இன்று காலை செக்கடி மேடு அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை பொருளாளர் எஸ் ஏ அப்துல் ஹமீது தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சமீபத்தில் அதிரையில் பெய்த தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பது தொடர்பாகவும், இரத்த தானம் வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன.

மேலும் சமீபத்தில் மணமுடித்து இல்லற வாழ்வில் புதிதாக இணைந்திருக்கும் அதிரை ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் சேக் அப்துல் காதர், இத்ரீஸ் அஹமது ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன் படி இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட சேக் அப்துல் காதர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை நிர்வாக கமிட்டி உறுப்பினர் திரு. ஆறுமுகசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் செயலாளர் நிஜாமுதீன், உறுப்பினர்கள் முஹம்மது தமீம், அன்சாரி, அப்துல் ஹலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...