Pages

Sunday, January 24, 2016

அதிரையில் புதிய டாக்ஸி ஸ்டாண்ட் அமைய எதிர்ப்பு தெரிவித்து திடீர் மரக்கன்றுகள் !

அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிழமேல் பகுதியை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 9.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டன.

இதை அடுத்து அதிரை பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் டாக்ஸி வாகனங்கள் இந்த பகுதியில் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு நடந்து வந்தது.

இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் தெருகிராம மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி அதிரை ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து இந்த பகுதியில் தனியார் டாக்ஸி வாகனங்கள் நிறுத்தி வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியார் வாகன ஆக்கிரமிப்பை அகற்ற நேற்று முன்தினம் அதிரை வருகை தந்த பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன் தலைமயிலான வருவாய் துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியோடு பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களை அப்புறப்படுத்தினார்கள்.

இதைதொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலை முத்தம்மாள் தெரு எதிரே அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் ஒட்டிய பகுதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் இன்று இந்த பகுதியில் டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார் நினைவு சாலையோர மரக்கன்றுகள் திடீரென நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை பாதுகாக்க இந்த பகுதியை சுற்றி கம்புகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்தததாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த இடத்தில் புதிய டாக்ஸி ஸ்டாண்ட் அமைய எதிர்ப்பு தெரிவித்து திடீரென மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு இன்று அதிகாலையில் தெரியவந்தது. இவை பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் காவல் துறையினர் ரோந்தில் உள்ளனர்.
 
   

1 comment:

  1. திட்டமிட்ட சதிசெயல் இது., டாக்க்ஷி ஸ்டான்ட் வேண்டாம் ஆனால் நில ஆக்கிரமிப்பு செய்துக்கொள்ளலாம் என்று மக்கள் நினைத்து விட்டார்கள் போல. டாக்க்ஷி ஸ்டான்ட் அமைய முன்பே பரிந்துரை செய்திருக்கக் கூடாது ECR ரோடு என்றும் விபத்து ரோடு என்பதால் மாற்று இடத்தை தேர்வு செய்துருக்க வேண்டும். யாருடைய ஆலோசனை செய்து இங்கே கொண்டுவந்தார்கள்? அரசு பணம் அதாவது மக்கள் பணம் விரையம் தான் போகிறது.பேருந்து நிலையத்தை மாற்றும் இடத்திற்கு டாக்க்ஷி ஸ்டான்ட் அமைய வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...