Pages

Monday, January 18, 2016

தமிழக இளைஞருக்கு மலேசிய அரசின் டத்தோ விருது !

ராமநாதபுரம் மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட இளைஞருக்கு மலேசிய அரசின் உயரிய விரு தான ‘டத்தோ’ பட்டம் வழங்கப்பட் டுள்ளது.

‘டத்தோ’ என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்குகின்றனர். 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

மலேசியர்கள் மட்டுமே பெறக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர். இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கான டத்தோ விருதுகள் 12 பேருக்கு மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட கமால் பாட்சாவின் மகன் முகம்மது யூசுப்(35) என்பவரும் விருது பெற்றுள்ளார். இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நன்றி: தி தமிழ் இந்து

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...