Pages

Wednesday, January 6, 2016

அதிரையில் சப் கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது !

தஞ்சை மாவட்டம் நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் அதிரை கடலோரப்பகுதிகளில் இரட்டை மடி, ரேஸ் மடி வலை விரித்து ஆழம் குறைந்த பகுதிகளில் மீன் பிடிப்பதை தடுக்க கோரியும், பல லட்சம் மதிப்புள்ள வலைகளை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் அதிரை பேரூந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த இன்று ( 06-01-2016 ) காலை அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவாடி வரையிலான பகுதிகளை சேர்ந்த 37 மீனவ கிராம பிரதிநிதிகள் மற்றும் மீனவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்துவதற்கு தயார் நிலையில் அதிரையில் கூடினார்கள்.

பேச்சுவார்த்தையில் சப் கலெக்டர் ராஜசேகரன்:
இந்நிலையில் பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன், பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந் மேனன்,  மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, பட்டுக்கோட்டை தாசில்தார், அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சேதுபாவா சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் கடலோரப்பாதுகாப்பு குழும காவல் நிலைய போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் நாட்டுப்படகு மீனவ கிராம பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் அதிகாரிகள் தரப்பில் இரட்டை மடி வலை பயண்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து மீனவர்கள் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

பேச்சுவார்த்தையில் நாட்டுப்படகு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சுப்பிரமணி, காளிதாஸ், நெய்னா மலை, மருதையன், செல்வராஜ், அனஸ், அதிரை மைதீன் உள்ளிட்ட மீனவ கிராம பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி அதிரை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அதிரை சேர்மன்:
நாட்டுப்படகு மீனவர்களின் சாலை மறியல் போராட்ட தகவல் அறிந்த அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாட்டுப்படகு மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதிகாரிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு மீனவர்களுக்கு ஆதரவாக பேசினார். பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படும் வரை களத்தில் நின்றார். மேலும் தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.எஸ் பஷீர் அஹமது கலந்துகொண்டு மீனவர்களுக்கு ஆதரவாக பேசினார்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...