Pages

Wednesday, January 6, 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு: அதிரையிலிருந்து அதிகமானோரை அழைத்துச் செல்ல முடிவு !

எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

இதையொட்டி நேற்று [  05-01-2016 ] தவ்ஹீத் பள்ளியில் கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிளை தலைவர் எம்.கே.எம் ஜமால் முஹம்மது தலைமை வகித்தார். கிளை பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பிரசாரகரும், அல் ஹிக்மா மகளிர் கல்லூரி முதல்வருமாகிய அஷ்ரஃப்தீன் பிர்தவ்ஸி கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' மற்றும் இதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

பின்னர், 'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டின் அவசியத்தை விளக்கி கூறி அதிரையின் பிரதான இடங்களில் தெருமுனை பிராசார கூட்டங்கள் நடத்துவது, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விளக்கி கூறுவது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது, மாநாட்டிற்கு அதிரையிலிருந்து அதிகமானோரை வாகனங்களில் அழைத்து செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் TNTJ அதிரை கிளை பொறுப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்.
 

2 comments:

  1. கல்யாண வீட்டில் கலாட்டா பார்த்த மக்களுக்கு இப்போ மௌத்தான வீட்டிலும் கலாட்டா அரங்கேறியுள்ளது கும்பகோண பக்கத்தில் ஆவூர் என்ற ஊரில்; கேள்வி பட்டிருக்கலாம் அதாவது தவ்கீது சகோதரரின் தந்தை காலமாகிறார் அவரை தவ்கீது முறையில் நல்லடக்கம் செய்ய மகன் விருப்பப்படுகிறார் ஆனால் ஜமாத்தார்கள் தாங்கள் முறையில் தான் நல்லடக்கம் செய்யவேண்டும் என்று கூற; இரு பிரிவினரிடையே மோதலை தடுக்க பெரும் காவல்துறை அதிகாரிகள் வரவளைககப்பட்டு பாதுகாப்பு போடப்படுகிறது; இறுதியில் பெண்களே ஜனாஸாவை எடுத்து வந்து நல்லடக்கம் செய்யப்படுகிறது; இது முறை தானா? மாற்றுமதத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?

    மாநகராட்சியில் மாநாடு நடத்தினால் அதில் வைக்கப்படும் கோரிக்கை ஆளும் அரசுக்கு எட்டும் என்பார்கள் அல்லது தங்களது பலம் என்னவென்பதை நிரூபிக்க கூடு கூட்டம் என்பார்கள் அதனால தேர்தலில் பேரம் பேசலாம்.. ஒற்றுமை கேள்வி குறியாக இருக்கும்பொழுது ஷிர்க் ஒரு !!!! தான். மோதலை தடுக்க நல்லது நடக்கட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...