Pages

Saturday, January 9, 2016

முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அளித்த புகாரின் பேரில் கைது !

முகநூலில் இஸ்லாமியர்கள் மீது அவதூறு பிரச்சாரம் செய்ததாக கூறி கல்யான் ராமன் என்பவர் மீது மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அளித்த புகாரின் பேரில் சென்னை மாநகர காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவல் வெளிவந்துள்ளது.

இதுதொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சிறுபான்மையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை செய்வதை முழு நேரத் தொழிலாக கொண்டிருக்கும் சங் பரிவாரைச் சேர்ந்த கல்யாண் ராமன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கடந்த டிசம்பர 30 அன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் திருமிகு டி.கே. ராசேந்திரன் இ.கா.ப. அவர்களிடம் நேரில் முறையிட்டோம்.

கல்யாண் ராமன் கடந்த டிசம்பர் 26 மாலை 6.01 மணிக்கு அவரது முகநூலில் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை தொடர்புபடுத்தி ஒரு அவதூறு பதிவுச் செய்திருந்தார். இதனை சுட்டிக் காட்டி நமது புகார் அளிக்கப்பட்டது.

நமது புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல்துறை அதன் அடிப்படையில் சென்னை சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றை பதிவுச் செய்து இன்று அதிகாலை கல்யாண் ராமனை கைதுச் செய்து அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளது.

கடந்த ஹஜ் புனித யாத்திரையின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவர் முகநூலில் அது குறித்து வெறுப்பு பிரச்சாரப பதிவிட்டார். இது குறித்து திருமங்கலம் தமுமுக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைதுச் செய்யப்பட்டார். இப்போது மனிதநேய மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் கல்யாண் ராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூலில் வெறுப்பு பிரச்சாரத்திற்கு இடம் இல்லை என்பதை உணர்த்திய தமிழக காவல்துறைக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முகநூலில் வெறுப்பு பிரச்சாரம் செய்வதை தொழிலாக கொண்டிருக்கும் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...