Pages

Tuesday, January 19, 2016

மாவட்ட ஆட்சியர் நடத்திய ரெட் கிராஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு !

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, தஞ்சாவூர் மாவட்ட ஆண்டு பொதுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ரெட்கிராஸ் துணைத் தலைவர் மற்றும் தஞ்சாவூர் கோட்டாட்சியர் திரு ஜெய்பீம் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் ரெட்கிராஸ் மாவட்ட நிர்வாகக் குழுவிற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த ரெட்கிராஸ் வாழ்நாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, தலைமை ஆசிரியர் மகபூப் அலி, நிஜாமுதீன், அன்சாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது, கவுன்சிலர் முஹம்மது செரீப், நவாஸ் கான், AVM சாகுல் ஹமீது, மரைக்கா கபீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...