Pages

Saturday, January 2, 2016

அதிரையில் திருமண நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ - ரெங்கராஜன் எம்எல்ஏ பங்கேற்பு !

தமுமுக மாநில மாணவர் அமைப்பு நிர்வாகியாக பொறுப்பில் இருப்பவர் சேக் அப்துல் காதர். எம்.பி.ஏ பட்டதாரி. இன்று மாலை இவரது திருமணம் உலமாக்கள், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் செக்கடி பள்ளியில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமாகிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக அதிரை சிஎம்பி லேன் கல்லுக்கொல்லை பகுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ கலந்துகொண்டு மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக தமுமுக மாநில தலைவர் ஜே.எஸ் ரிபாயி ரஷாதி, பேராசிரியர் ஹாஜா கனி மற்றும் தமுமுக, மமக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமண நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், சமுதாய அமைப்பு நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...