Pages

Tuesday, January 5, 2016

காணாமல் போன - ஆதரவின்றி சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டறிந்த தகவல் தர வேண்டுகோள் !

தஞ்சை மாவட்டத்தில் காணாமல் போன, பெற்றோரை பிரிந்த, முகவரி தெரியாத குழந்தைகளை கண்டறிந்து தகவல் தர மாவட்ட ஆட்சியர் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ரயில், பேருந்து நிலையம், வழிபாட்டு தலங்கள், பாலங்கள், பொருட்காட்சி, சர்க்கஸ் நடைபெறும் இடங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள் போன்றவற்றில் அக்குழந்தைகளை கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்திடவும், இல்லையனில் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்க வைத்திடவும், இதற்காக பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளின் விவரங்களை குழந்தைகள் பின்தொடர் முறைமை மூலம் பதிவேற்றம் செய்ய ஆபரேசன் ஸ்மைல் II என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் 8 உட்கோட்டங்களில் எஸ்பி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஆபரேசன் ஸ்மைல் II என்றே பெயரில் நடைபெறும் இந்த உன்னதமான பணிக்கு மக்கள் அனைவரும் உரிய  ஒத்துழைப்பு வழங்கி, காணாமல் போன குழந்தைகளோ,  தங்களது பகுதியில் ஆதரவின்றி சுற்றி திரியும் குழந்தைகளோ இருப்பின் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 04362- 237014 மற்றும் 1098 சைல்டு லைன் என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...