Pages

Wednesday, January 13, 2016

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவு !

பன்னாட்டு லயன்ஸ் சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு அதிரை அருகே உள்ள ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்தார். இதில் குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. உணவை அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பரிமாறினார்கள் பின்னர் குழந்தைகளோடு ஒன்றாக அமர்ந்து அறுசுவை உணவை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் செய்யது அஹமது கபீர், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி வரவேற்புரை ஆற்றினார்.

அதிரை லயன்ஸ் சங்கம் செய்து வரும் தொடர் உதவிகளுக்கு ராஜாமடம் ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பக பொறுப்பாளர் ஆர்.எஸ்.மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட என்.யூ ராமமூர்த்தி ( பி.எம்.ஜே.எஃப் ) அவர்கள் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகத்திற்கு தேவைப்படும் ரூ 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை உதவிசெய்ய முன்வந்தார். தானாக முன்வந்து அறிவித்த இவரது உதவியை லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலரும் பாராட்டினர்.

நிகழ்ச்சி முடிவில் லயன்ஸ் சங்க தலைவர் ஆறுமுகச்சாமி ஏற்புரை ஆற்றி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் கலீலுர் ரஹ்மான், உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சாகுல் ஹமீது, முல்லை மதி, ரெட் கிராஸ் அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ், அபுல் ஹசன் சாதலி, மாணிக்க முத்துசாமி மற்றும் காப்பக பொறுப்பாளர்கள், குழந்தைகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...