Pages

Wednesday, January 6, 2016

மினி லாரி மோதி அதிரை சிறுமி பரிதாப பலி: இருவர் படுகாயம் - பொதுமக்கள் சாலை மறியல் !

முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் மினி லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற சிறுமி உயிரிழந்தார். சிறுமியின் தாய் உள்பட இருவர் பலத்த காயமடைந்தனர்.

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே முடச்சிக்காசு பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சத்யா (28). இவருக்கு திருமணமாகி பவிஷா (4) என்ற மகள் உள்ளார்.

கணவர் பன்னீர்செல்வத்துடன் நாகை மாவட்டம், கரியாப்பட்டினத்தில் வசித்து வரும் சத்யா, அண்மையில் தனது தந்தை வீட்டுக்கு மகளுடன் வந்திருந்தார்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சத்யா, அவரது மகள் பவிஷா, சகோதரர் விக்னேஷ் (30) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது எதிரே நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு மீன் ஏற்றி வந்த மினி லாரி மோதியது. மேலும் அந்த மினிலாரி சாலையோரம் நின்ற பேரூராட்சி குப்பை அள்ளும் டிராக்டர் வாகனம் மீதும் மோதியது.

இந்த விபத்தில் சத்யாவின் மகள் பவிஷா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சத்யாவும், விக்னேஷும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, பேரூராட்சிக் குப்பை டிராக்டர் வாகனம் சாலையோரம் நின்று குப்பையைக் கொட்டி தீ வைத்ததில் ஏற்பட்ட புகை மூட்டத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறி அந்தப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸாரின் சமரசத்தை ஏற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...