Pages

Friday, January 1, 2016

அமீரகத்தில் அதிரை கிரிக்கெட் அணி சுழற் கோப்பையை கைப்பற்றியது!

அமீரகம் துபாயில் DFCC நடத்தும் கிரிக்கெட் தொடர்போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பலம் வாய்ந்த கிளப் அணிகள் கலந்துக்கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினரும் சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் சென்ற வாரம் நடந்த அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இன்றைய தினம் இறுதி போட்டி துபாய் FESTIVAL CITY மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இறுதிப்போட்டியில் கலிஃபா CC அணியை எதிர்த்து அதிரை ABCC அணி மோதுகின்றனர். முதலில் பேட் செய்து வரும் அதிரை ABCC அணி வழுவான தொடக்கத்தை துவக்கியது

முதலில் மட்டைப்பனியை செய்த அதிரை ABCC -A அணி  313/3, 20 over விளாசினர். இதில் அஸ்லம் மற்றும் சமீம் அவர்கள் சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய கலீஃபா CC மேலப்பாளையம் அணி 215 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது பவுலிங்கிலும் நாங்கள் சலைத்தவர்களல்ல என்பதை நிரூபித்துக்காட்டினர் அதிரை அணியினர்.
இதற்கு முன் கடந்த 5 முறை இறுதி போட்டிக்கு வந்த அதிரை ABCC DXB அணி முதல் இருப்போட்டிகளில் இரண்டாம் இடமே கிடைக்கப்பெற்ற இவ்வணி தற்போது தொடர்ந்து மூன்று முறையாக ஹட்ரீக் சாதனை பெற்று தாங்கள்தான் தலைசிறந்த அணி என்று முத்திரையை பதித்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.

இவ்வணியை மிகச்சிறந்த முறையில் நடத்திச்செல்லும் மேலாளர் செய்யத் அவர்கள் மற்றும் வெற்றிக்கேப்டன் ரியாஸ் அவர்களின் ஆலோசனை பெரிதும் பங்களிப்பில்தான் இவ்வெற்றி கிடைத்தது என்பது மிகையாகாது.

இத்தொடரில் அதிரை ABCC A & B இரு அணிகளாக களமிறங்கினர், B அணியினர் தொடர்ந்து வெற்றிபெற்று காலிறுதியில் தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...