Pages

Thursday, January 7, 2016

அதிரை கவுன்சிலரின் போஸ்ட் கார்டு கோரிக்கை: முயற்சியை பாராட்டி திட்டத்தை அதிரை சேர்மன் தொடங்கி வைத்தார் !

அதிரை பேரூராட்சியில் 16 வது வார்டு உறுப்பினராக பொறுப்பில் இருப்பவர் என்.ஏ முஹம்மது யூசுப். கிடைக்கும் நேரங்களில் பொதுநலன் சார்ந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வைத்து வருவது இவரது வாடிக்கை. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுநலன் சார்ந்த ஏராளமான பொது தகவல்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் கேட்டு பெற்றுள்ளார்.

சரி விசயத்திற்கு வருவோம்...
ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பயணிகள் பட்டுக்கோட்டை, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதால், தேவையற்ற அலைச்சலை சந்தித்து வருகின்றனர். எனவே அதிரையில் தலைமை தபால் நிலையம் அல்லது அதிரையின் பிரதான மத்திய பகுதியில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பெரும்பாலான பொதுமக்கள் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இது தொடர்பாக நமதூர் சமூக ஆர்வலரும், யூனைட்டட் பவுண்டேசன் அமைப்பின் செயலாளருமாகிய அப்துல் ரெஜாக் அவர்கள் இதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுப்படார். இவரது முயற்சிக்கு பக்க பலமாக நமதூர் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், அதிரை பைத்துல்மால் செயலாளர் அப்துல் ஹமீது, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகி ஜலீலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன் ஆகியோர் இருந்தனர்.

பல மாதங்கள் ஆகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் வராமல் தாமதாமாகி வந்த நிலையில் கவுன்சிலர் என்.ஏ முஹம்மது யூசுப் தனது சொந்த செலவில் சம்பந்தப்பட்ட திருச்சி ரயில்வே மண்டல வணிக மேலாளர் அவர்களுக்கு 100 போஸ்ட் கார்டுகள் இலக்காக கொண்டு தனிதனியே அதிரை ஆர்வலர்களிடம் எழுதி பெறப்பட்ட கோரிக்கையை அனுப்பி வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இவரது பொதுநலன் சார்ந்த முயற்சியை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் பாராட்டி வாழ்த்து தெரிவித்து முதல் போஸ்ட் கார்டில் கையெழுத்து இட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து ஆர்வலர்களிடம் போஸ்ட் கார்டு கோரிக்கை எழுதி அனுப்பும் திட்டத்தை எடுத்துச்செல்ல இருக்கிறார்.
 

6 comments:

 1. Adiraikku pukaivande
  vara athekamana naparkalai
  parththu korekkai koduththathu
  anakkum theareyum. Valka valamudan na,,,sh

  ReplyDelete
 2. //ரயில் டிக்கெட் முன்பதிவிற்காக அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பயணிகள் பட்டுக்கோட்டை, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதால், தேவையற்ற அலைச்சலை சந்தித்து வருகின்றனர்.//

  இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், நமதூருக்கு அகல ரயில் பாதை அமைவதற்கோ, இன்னும் மோசமாக, ரயில் நிலையமே இல்லாமல் போகும் அவல நிலையோ ஏற்பட்டுவிடாதா? ஆர்வலர்கள் சிந்திக்கட்டும்!

  ReplyDelete
  Replies
  1. Dear commenters.adirampattinam periya jumma pallivasalukku appiyan Yousuf has to be given nearly fifty two thousand rental arrears.he cheated property of jumma masque.there is no bold man to collect this amount by committee.shame to jumma committee,shame to jumma committee

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...