Pages

Tuesday, January 26, 2016

சவூதியில் தவித்த தமிழக இளைஞர் மீட்டு தாயகம் அனுப்பி வைப்பு !

சவூதியில் தவித்த கடையநல்லூர் இளைஞர் சமூக நல இயக்கத்தால் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வாலிபர் அப்துல் ஹமீது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியா, தாயிஃப் பகுதிக்கு வேலைக்காக சென்று இரண்டு வருடம் பணியாற்றிய பின் விடுமுறையில் ஊர் செல்ல உரிமையாளரிடம் கூறிய போது விமான பயணச்சீட்டு வழங்காமல் விடுமுறை விசா மட்டும் கொடுத்துள்ளார் உரிமையாளர்.

விமான டிக்கெட் எடுக்க பலரிடமும் முயற்சித்து முடியாமல் போகவே தமது உறவினரை தேடி அல்ஹஸ்ஸா பகுதிக்கு வந்துள்ளார். இந்நிலையில் வாலிபர் அப்துல் ஹமீது தன்னிடம் இருந்து ஓடி விட்டதாக உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுத்து விட்டார்.

வெளியில் வேலையும் செய்ய முடியாமல் ஊருக்கும் திரும்ப முடியாமல் தவித்த கடையநல்லூரைச் சார்ந்த அப்துல் ஹமீது என்ற வாலிபர் சமூக நல அமைப்பான இந்தியன் சோஷியல் ஃபோரம் அல் ஹஸா கிளையின் உதவியை நாடினார்.

சட்ட ரீதியான நடவடிக்கை அங்கு தாமதமானதால் தம்மாம் தலைமையிடம் உதவி கோரப்பட்டு இன்று ஊர் திரும்பினார்.

இந்திய தூதரகத்தை நேரடியாக அணுகி வாலிபர் அப்துல் ஹமீதுக்கு எக்ஸிட் பெற்றுத் தந்ததுடன் அவருக்கான விமான டிக்கெட் பயண செலவுகளையும் இந்தியன் சோஷியல் ஃபோரம் அல் ஹசா கிளை முழுமையாக ஏற்றுக்கொண்டது.

அல்ஹஸா கிளை நிர்வாகிகளின் மனித நேய சேவையை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,மாநில தலைவர் காயல் அபுபக்கர்,பொது செயலாளர் காயல் மக்தூம் நைனா,இந்தியா ஃபிரெடர்னிடி ஃபோரம் தமிழ் மாநில தலைவர் சாதிக் மீரான் உள்ளிட்ட பலரும் வெகுவாக பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...