Pages

Sunday, January 10, 2016

ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டி !

அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளி செயலர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.

21 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சமத்துவ பொங்கல் விழாவை ஒட்டி பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் பானை உடைத்தல் போட்டி, கோலப்போட்டி, லக்கி கார்னர் போன்றவை நடந்தது. இதில் பள்ளி ஆசிரியைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. பரிசுகளை பள்ளி முதல்வர் என். உதயகுமார் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மாணவர்கள் மத்தியில் பேராசிரியர் என். சேகர் பொங்கல் பண்டிகை குறித்து சிறப்புரை ஆற்றினார். விழா முடிவில் பள்ளி துணை முதல்வர் சுதாகர் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...