Pages

Saturday, January 23, 2016

மேஜராகும் மைனர்கள் !? மைனராகும் மேஜர்கள் !?

மேஜராகும் மைனர்கள் ( Minors turn to Majors ), மைனராகும் மேஜர்கள் ( Majors turn to Minors )
மைனர்கள் மேஜராகலாம் அது வழக்கமானது தான், ஆனால் மேஜர்கள் எப்படி மைனர்கள் ஆக முடியும் ? 
விபரம் இல்லாமலேயே காலங்காலமாக மேஜர்களை நமது சமூகமும், நாடாளுமன்றமும், ராஜ்யசபாவும் சில அமைப்புகளும் நீதி மன்றங்களும் குற்றங்களின் தன்மையை ஆராயாமல் மைனர் என்றும் சிறார் என்றும் கூறி வந்ததன் விளைவு தான் 16,17,18, வயதுடையோர் செய்யும் கொடூரமான குற்றங்கள் பெருக காரணமாக அமைந்தன ,

அரசு வெளியிடும் புள்ளி விபரங்களே ( மைனர் குற்றங்கள் தொடர்பாக ) இதற்கு சான்றாக உள்ளன . இந்த குற்றங்களில், நீதிமன்றங்களுக்கு செல்லும் அதிக வழக்குகள் பாலியல் குற்றங்கள் ( Sexual offences ) தொடர்பானது இதில் சர்வதேச அளவில் கேள்விபடாத படுமோசமான கொடூரமான் கற்பழிப்பு சம்பவம் ( brutal rape incident  ) தலைநகர் டில்லியை உ லுக்கி எடுத்தது ( 16-12--2012 அன்று நிகழ்ந்தது ) இந்தியாவில் மட்டுமன்றி சர்வதேச நாடுகளிலும்  இந்த மோசமான சம்பவம் பல நாட்களுக்கு பரப்பரப்பாக பேசப்பட்டது.

மருத்துவ மாணவியான அந்த பெண்ணின் பெயர் ஜோதி சிங் ( Jothi singh ) என்பதாகவும் செய்திகள் வெளியாகின , ஓடும் பேருந்தில் இந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர்களில் ராமன்சிங் என்பவன் டெல்லி திஹார் சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக படித்தோம் , 4 பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது . ஒருவன் மட்டும் 2012-ல் 17 வயதானவன் என்பதால் சிறார் தண்டனை சட்டப்படி ( Juvenile justice act ) அவனுக்கு 3 வருடம் தண்டனை வழங்கப்பட்டது அது முடிவுற்றதாலும், அந்த சமயத்தில் கொடுங்குற்றம் புரியும் சிறார் களுக்கான  சட்டம் திருத்தப் படாமல் இருந்ததாலும் 20.12.2015 அன்று அவன் விடுதலை செய்யப்பட்டான் தவிர அவனுக்கு தையல்கடை வைக்க பண உதவியும் செய்யப்பட்டுள்ளது .

சிறார்களுக்கு வயது வரம்பு என்ன ? ( சிறார் அல்லது மைனர்கள் )  அடல்ட் ( ADULT ) எனும் வயது வந்தோர் அல்லது பெரியவர்கள் எந்த வயதில் அடக்கம் ? இது பற்றிய விளக்கமான சிந்திக்கக் கூடிய ஆராய்ச்சிகளின் அடிப்படையிலான நடைமுறைகள் நீண்ட காலமாகவே பின்பற்றப்பட வில்லை. நாளுக்கு நாள் சிறார் குற்றங்கள் அதிகரித்து வருவதை த்தொடர்ந்து அரசுக்கும் நீதி மன்றங்களுக்கும் புதிய சிந்தனையைக் கொடுத்துள்ளது .

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ( Women and child development ministry ) இதில்  தான் 16,17,18 வயதுடையோர் பற்றிய பதிவுகளும் விதி முறைகளும் வருகின்றனர் இந்த விதி முறைகளே முதலில் தவறானது. குழந்தைக்கான அர்த்தம் என்ன ? பிறந்தது முதல் 5 வயது பூர்த்தியானவர்களை மட்டுமே குழந்தை ( child ) என்று கூறலாம் 6 வயது முதல் 15 வயது வரை சிறார் அல்லது மைனர் (Minor )என்று கூறலாம் 15 முடிந்து  16 ஆரம்பித்து  விட்டாலே சிறார் குழந்தை என்று கூறுவது முற்றிலும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று 16 அல்லது 17 வயது பையனுக்கும் இதே வயதுடைய பெண்ணுக்கும் ( இந்த வயதையெல்லாம் நாம் சிறுவர் சிறுமி என்றே  சொல்லிக்கொண்டிருந்தோம் ) திருமணம் நடந்தாலோ அல்லது இவர்களுக்குள் தவறான( Sex ) செக்ஸ்   தொடர்புகள் இருந்தாலோ குழந்தை பிறக்கக் கூடிய சூழ்நிலை இருப்பதை பல ஊடகங்கள் மூலமாக அடிக்கடி படித்து வருகின்றோம்.

இந்த நிலையில் இவர்களை சிறார் என்றும் மைனர் என்றும் வகைப் படுத்துவது எப்படி பொருத்தமாகும் ? குழந்தை பெற தயாரானவர்களும் தகுதி உள்ளவர்களும் சிறார்களா?   குழந்தையை குப்பையில் வீசி விட்டு இளம் பெண் மாயம் என்ற செய்திகளையும் தங்கள் பிள்ளைகளின் முறையற்ற செயல்களால் பெற்றோர்கள் தற்கொலை என்ற செய்திகளையும் அடிக்கடி நாம் படிக்கின்றோம்.
1
இதையெல்லாம் முற்றிலும் ஒழித்துக்கட்ட என்ன வகையான சட்டங்களை அமுல படுத்துவது என்பதை இனிமேலாவது அரசும் நீதி மன்றங்களும் ஒருங்கிணைந்து  சிந்தித்து செயல் பட வேண்டும். 15  வயதை தாண்டிவிட்டாலே பாஸ்போர்ட்டுக்கு முழு கட்டணம் செலுத்த வேண்டும் ( ரூபாய் 1500 ).  10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகக் கூடிய பாஸ்போர்ட் வழங்குவார்கள் தவிர இவர்களுக்கு காவல் துறை சரிபார்த்தலும் ( POLICE VERIFICATION) கட்டாயம் .15 வயது வரை நான் மைனர்களுக்கான கட்டணம் (ரூ1000-5 ஆண்டுகள் செல்லத்தக்க பாஸ்போர்ட் வரும் ) . மைனர் வயது என்பது ஒவ்வொரு  நிர்வாகத்திலும் வேறுபடுகிறது. குழந்தை பெற தகுதியானவர்களையும் ( 16,17,18 வயதுள்ளோர் ) நன்றாக திட்டம் தீட்டி சிறைகளில் இருந்து தப்பி செல்ல கூடியவர்களையும் இன்னமும் நாம் சிறார் அல்லது மைனர் என்றும் சொல்லிக்கொண்டிருப்பது அர்த்த மற்றது. 2013 ஜனவரியில் வெளியிடப்பட்ட செய்திகளின் படி 16 முதல் 18 வயது உடையோர் புரிந்த பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 33 ஆயிரம் திருமதி மேனகாகாந்தி அவர்களின் அறிக்கைப்படி (07.05.2015 ) இது போன்ற கொடுங்குற்றங்களில் ( HEINOUS CRIMES )  ஈடுபட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 3887, ( 2013) 16 வயது முதல் எல்லோருமே பெரியவர்கள்தான் என ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி (J.S.VERMA-JAGADISH SARAN VERMA -RTD JUDJE.SUPREME COURT) வர்மா  கமிட்டிக்கு ஏற்கனவே நான் கொடுத்த புதிய ஆலோசனைகளின் படி சட்டங்கள் திருத்தப்பட்டு விட்டன.

சில தினங்களுக்கு முன் மாண்பு மிகு குடியரசு தலைவர் இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கி விட்டார் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் சொன்ன ஆலோசனைகளின் படி சிறார் சட்டத்தில் திருத்தம் வரும்  என்று நான் கூறியது உண்மையாகி உள்ளது பொருந்தாத திருமண சட்டங்களால் திருந்தாத குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. திருமணமும் பாலியல் உறவுகளும் உணர்ச்சிகளின் அடிப்படையில் ஆனவை . கோபத்தை கட்டு படுத்தலாம், பசியை கட்டு படுத்தலாம் உறக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் நடைமுறையில் சாதாரணமான விஷயங்கள். ஆனால்  இயற்கையாகவே இறைவனால் வழங்கப்பட்டுள்ள பாலியல் உணர்வுகளை ( SEXUAL FEELINGS ) வயது வரம்பு ( திருமணத்திற்கு ) என்ற ஒன்றை காரணம் காட்டி அரசும் நீதி மன்றங்களும் செயல் பட்டால் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் பெருகவே அது காரணமாக அமையும் . மேலும் இயற்கையான் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துவது நரம்பு தளர்ச்சிக்கும் (NERVOUS ) மன நோய்க்கும் ( MENTAL DISORDER ) முக்கிய காரணமாக அமைந்து விடும். நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்டோர் எத்தனை லட்சம் ?நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் எத்தனை லட்சம் என்பதை கணக்கிட்டால் அதிர்ச்சி தரக் கூடிய பல உண்மைகள் வெளி வரும் திருமண வயது 21, ( ஆண் ) , 18, ( பெண் ) என்பதை தளர்த்தினாலே பாலியல் குற்றங்களும் தவறான தொடர்புகளும், மனநோயும் , நரம்புத்   தளர்ச்சி நோயும் வெகுவாக குறைந்து விடும் 19 அல்லது 20 வயது ஆணும் 16 அல்லது 17 வயது பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் எந்த தடையும் இல்லை என நீதி மன்றங்கள் உத்தரவிட வேண்டும் இதில் யாரும் தலையிடக்கூடாது. காரணம் திருமணத் திற்கான வயது இதுதான் என கட்டாயப் படுத்துவதும் பாலியல் உணர்வுகளை கட்டுப் படுத்த சொல்லுவதும் ஏற்கனவே நான் செய்திகளில் வெளியிட்டது போல் மனித உரிமை மீறல் தொடர்பானவை ( VIOLATION  OF HUMAN RIGHTS ) என்று நான் கூற முடியும்.

பாலியல் உணர்வுகளை கட்டு படுத்த சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது மனோ தத்துவ நிபுணர்களிடமும் (PHSYCOLOGISTS ) பாலியல் நிபுணர்களிடமும்( SEXOLOGISTS ) கேட்டால் நான் சொல்வது முற்றிலும் உண்மை என்ற பதில் வரும் திருமண வயதை திருத்துவதால் கல்வி பாதிக்கப் படுமா? ஒரு குறிக்கோளுடன் கல்வி பயில்பவர்கள் திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை . நல்ல கல்வி , நல்ல வேலை வாய்ப்பு என்பது  அவர்களது இலக்காக இருக்கும் அதனால் இந்த சட்ட திருத்தத்தால்  யாருடைய கல்விக்கும் எந்த பாதிப்பும் வரப் போவதில்லை .கல்வியா ? திருமணமா ? என்ற பட்டி  மன்றம்  நடக்கக் கூடாது  திருமண வயதைத் தளர்த்துவதா அல்லது வரம்பு மீறி செல்லும் பாலியல் குற்றங்களை வேடிக்கை பார்ப்பதா ? என்ற பட்டிமன்றமே இப்போதைக்கு அவசியமானது.குற்றங்கள்

அதிக மாகி வருவதால் அரபு நாடுகளில் உள்ள சட்டங்களை அமுல் படுத்துவதை பற்றி யோசிக்கிறேன் என்பதாக தெலுங்கானா முதல்வர் திரு. கே சந்திர சேகர ராவ் ( தெலுங்கானா- TELANGANA  CM  SRI K CHANDIRA SEKARA RAO ). சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்தார் .குழந்தை பாலியல் குற்றங்களை ( CHILD RAPE ) தடுக்க தனிச்சட்டம் இயற்றுவது அவசியம் என நீதி பதிகள் தீபக் மிஸ் ரா மற்றும் என்.வி.ரமணா ( HON’BLE JUSTICES  DIPAK MISRA & N.V.RAMANA/ சுப்ரீம் கோர்ட்) ஆகியோர் 11.01.2016 அன்று கூறி உள்ளனர். வர்மா கமிட்டிக்கு ஏற்கனவே நான் அனுப்பிய ஆலோசனைகளில் மரண தண்டனை பற்றியோ (DEATH SENTENCE ) ஆண் மை நீக்கம் (CHEMICAL CASTRATION ) பற்றியோ கூற வில்லை. மாறாக இது போன்ற குற்றங்களை ஒழிக்க  வேண்டுமானால் பொது இடங்களில் கசையடி வழங்குவதும் அதன் பிறகு ஜெயில் தண்டனை வழங்குவதும் தான் நிரந்தர தீர்வாக அமையும் என்று குறிப்பிட்டு இருந்தேன் . நாட்கள் செல்ல செல்ல இது போன்ற சட்டங்கள் தேவைதான் என்பதை நீதி மன்றங்களும்  நாடாளு மன்றமும் உணர்ந்து  கொள்ளும் . எனது கருத்துக்களை பரிசீலித்து அமுல் படுத்துவது நீதி மன்றங்கள் மற்றும் அரசின் முடிவை பொறுத்தது.

அரசியல் POLITICS -சர்வேயும் சதவீத கணக்குகளும்( SURVEY & PERCETAGE CALCULATIONS ) கடந்த காலங்களில் அரசியல் கூட்டணி மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பான பல சதவீத கணக்குகள் தவறாகவே முடிந்துள்ளன என்னுடைய கருத்துகளின்படி இந்த சதவீத கணக்குகள் என்பது அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதைக் குழப்புவதற்காகவே வெளியிடப் படுகின்றன. ஒட்டு மொத்த வாக்காளர்களிடமும் இவர்கள் எந்த காலத்தில் சர்வே எடுத்தனர். ஒரு வீட்டில் 5 பேர் அல்லது அதற்கும் மேற்பட்டோர் இருந்தால் அவர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும்மே நான் இந்த கட்சிக்கு வாக்களிப்பேன் என்று கூறுவார்கள் அவர்கள் எப்போதுமே ஒரு கட்சியை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள் . அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதை கூற மாட்டார்கள். இப்படிப் பட்டோர் தமிழகம்  முழுவதும் பல லட்சம் பேர் இருக்கும் போது சில ஊடகங்கள் வெளியிடும் சதவீத கணக்குகளை சில அரசியல் கட்சிகள் அப்படியே நம்புவது வேடிக்கையானது. இந்த சட்ட மன்ற தேர்தலில் ( 2016 ) எந்த சதவீத கணக்கும் வொர்க் ஆகாது. தவிர எந்த ஜோதிடமும் வேட்பாளர்களுக்கோ, கட்சிகளுக்கோ பலன் தராது . மதிநுட்பமும் , மனோ தத்துவமும் கட்சிகளுக்கு மிகுந்த பலன் அளிக்கும் ( கூட்டணி , வேட்பாளர் தேர்வு , பிரச்சாரம் உள்பட ( ALLIANCE, SELECTION OF CANDIDATES , CAMPAIGN) பெரிய கட்சிகள் காலங்காலமாக 5 சீட் , 10 சீட் , தருவோம் என தங்களை நாடியுள்ள வளர்ச்சி அடைந்துள்ள சிறு கட்சிகளை நிர் ப்பந்திருப்பதால் அவர்கள் எல்லாம் தங்களுக்குள் கூடிப் பேசி தனி இயக்கமாக செயல் படும் சூழ் நிலை உருவாகி விட்டது. இதை தவறு என்று கூற முடியாது. அதே வேளையில் இந்த இயக்கங்களும் ஏதாவது ஒரு பிரதான கட்சியுடன் அணி சேர்ந்தால் மட்டுமே தங்கள் இலக்கை அடைய முடியும்.  

தொடர்ந்து இலங்கை பிரச்சனை மீனவர் பிரச்சனை என சில கட்சிகள் சில இயக்கங்கள் காங்கிரசை விமசித்து கொண்டே இருந்தால் அரசியலில் அவர்கள் குறிப்பிட்ட இலக்கை  அடைய முடியாது . மதி நுட்பமும் , மனோ தத்துவமும் கூட்டணி விஷயங்களில் எதிர்பார்த்த பலனை தரும். பரபரப்பான சில தொகுதிகளில் இந்த முறை பட்டுக்கோட்டை தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இது பற்றி பகிரங்கமாக இப்போதைக்கு நான் கூற விரும்ப வில்லை மற்ற விஷயங்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் தெரிவிப்பேன்.

அன்புடன்,
ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' / 'ஆய்வாளர்'
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...