Pages

Wednesday, January 13, 2016

தஞ்சையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி !

தஞ்சாவூர் மாவட்டம்,  தஞ்சாவூர் திலகர் திடலில் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் 27வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி தலைகவசத்துடன் (Helmet) விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம்.மயில்வாகணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.    
   
இப்பேரணியில் தலைகவசத்துடன் (Helmet) இருசக்கர வாகன ஒட்டுநர்கள் கலந்து கொண்டனர்.  இப்பேரணி  திலகர் திடலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ரயில் நிலையத்தில் முடிவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், போக்குவரத்து ஆய்வாளர்கள் விஜயகுமார், பிரபாகர், செந்தில்ராம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

1 comment:

  1. இந்தியாவில் இல்லை..,, தமிழ்நாட்டில் தரமான சாலை இருக்கா? குண்டு குழியுமா இருக்கு...; தரமான சாலை கொடுங்க வேகத்தை கட்டுப்படுத்த கேமரா வையுங்கள்..., தலையை விட ஹெல்மெட் வெயிட் ஆக இருப்பதால் மக்கள் சிரமப்படுகிறார்கள்.., சீனாவைப் போல் ஹெல்மெட் கொடுங்க மக்கள் அதனை அணிவார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...