Pages

Sunday, January 31, 2016

அதிரை ஆய்ஷா மகளிர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட பொதுக்குழு கூட்டம் !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் இன்று மாலை நடந்தது.

கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பி.எஸ் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி நசுருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் ஜெய்னூல் ஆபிதீன், தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் ஏ.எம் அப்துல் காதர்,தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர் டி. சைய்யது காதர் உசேன் புகாரி, தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர், அதிரை நகர தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன், அதிரை நகர செயலாளர் வழக்கறிஞர் ஏ.முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் எதிர்வரும் அன்று விழுப்புரத்தில் நடைபெறு மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு சிறப்பாக அமைந்திட அனைத்து ஜமாத்தார்கள், உலமாக்கள் கலந்துகொள்ள அழைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது, மாவட்ட வரவு - செலவீனங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரைமரி இல்லாத ஊர்களில் விரைவாக அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியில் எஸ். அபுல் ஹசன் மற்றும் வழக்கறிஞர் ஏ. தஸ்லீம் ஆசிப் ஆகியோர் புதிதாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்தின் முன்னதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட துணை தலைவர், அதிரை நகர தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் வரவேற்புரை ஆற்றினார். கூட்ட முடிவில் மணிச்சுடர் நிருபர் ஏ. சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் ஏ. சேக் அப்துல்லா, கே.எஸ்.ஏ அப்துல் ரஹ்மான், ஏ. சாகுல் ஹமீது, ஆர். ஜமால் முஹம்மது, எம்.கே.எம் அபூ பக்கர், கே.எம் அப்துல் ரெஜாக், எம்.ஜே அப்துல் ரவூப் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தஞ்சை தெற்கு மாவட்ட பகுதி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

4 comments:

 1. இளம்பிறைச் சிங்கங்களே னு ஃபிளக்ஸ் போர்டு வெச்சுருக்காங்க ஆனா கூட்டத்துல யாரும் அப்படி இளஞ்சிங்கங்களா தெரியவில்லையே... தாய்ச் சபை என்கின்ற கண்ணியம் வாய்ந்த பெயர் இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இருக்கின்றது அதனை வீணாக திமுக வில் கூட்டணியாக இருந்துக் கொண்டு அந்த நன் பெயரை வீணடிக்காமல் தைரியத்துடன் தேர்தலில் ஒருமுறையாவது தனித்து போட்டியியிட வேண்டும்..

  அப்பொழுது தான் இக் இக்கட்சியில் உள்ள பலம் பலவீனம் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள முடியும்... இல்லையெனில் இப்படி தான் காலம் முழுதும் கூட்டணி கூட்டணி என்று மற்றவர்களுக்கு உந்து சக்தியாகுமே தவிர இவர்கள் வரமாட்டார்கள்..

  ReplyDelete
 2. M.M.S குடும்பம் எப்ப முஸ்லிம் லீக்கில் சேர்ந்தது.

  ReplyDelete
 3. 'வரும் சட்டசபை தேர்தலில், செங்குந்தர் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு, அமைச்சர் பதவி கொடுத்தால், அந்த கட்சிகளுக்கு, 40 லட்சம் ஓட்டுக்கள் வழங்கப்படும்,' என அதன் மாநில தலைவர் செல்வராஜ் பேசினார். யாருக்காவது செங்குந்தர் அமைப்பை பற்றி தெரியுமா? எந்தக் கட்சி கூட்டணிக்கும் நாங்கள் காத்திருக்கவில்லை., முதல்வர் வேட்பாளர் அறிவித்து தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டது பாமக .., ஜாதிக்கட்சி எப்படி வளர்ந்தது என்று யாருக்கு தெரியாது? 1..2 சீட்டுக்கு கட்சிதாவிய பாமக இன்று தனித்து போட்டிடும் அளவுக்கு மாநிலத்தில் வளர்ந்திருக்கு என்றால் காரணம் என்ன? தினமும் ஆளும் கட்சி.., எதிர் கட்சிக்கு கேள்வி மேல் கேள்வி .. அயராது போராட்டம் .. தினம் தினம் ஏதோவொரு அறிக்கை விட்டு அரசியலில் வேரூன்றி விட்டது... காயிதே மில்லத் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட நம் சமுதாய அரசியல் கட்சி யாரிடம் இருக்குன்னு தெரியல. அதில் உள்ளவர்களின் செயல்பாடு ஆமை வேகத்தில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. முஸ்லிம்மக்கள் 80 சதவிகிதமுள்ள அறந்தாங்கி தொகுதியில் இன்றும் திருநாவுக்கரசு போட்டியிட்டால் வெல்ல முடிகிறது.. எப்படி? இதே நிலைமைதான் அதிரை.. இப்படி தமிழகத்தில் 120 தொகுதியில் நம் மக்கள் மெஜாரிட்டியாக இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள ஜாதியினர் தான் போட்டியிட்டு வெல்லுகிறார் அதே தொகுதியில் சுயேட்சியாக நம் சமுதாய தனி நபர் நின்றாள் 100 ஓட்டுக்கு மேல் விழாது ஏன்?

  தமிழகம் யாருக்கும் சொந்தமல்ல, அனைவருக்கும் இதில் உரிமை உள்ளது. நாம் ஒட்டு வங்கியாக திராவிட கட்சிக்கு பழகி விட்டோம் அதேவேளையில், அரசியல் ருசியை நாமும் அனுபவிக்க வேண்டும். தி.மு.க., - அ.தி.மு.க., எந்த கட்சியானாலும், 10 சதவீதம் சீட்டை ஒதுக்க வேண்டும். உதாரணமாக, 150 சீட் என்றால், அதில், 15 சீட் இஸ்லாமியருக்கு ஒதுக்கியாக வேண்டும். இரு அமைச்சர் பதவியை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். சமுதாயமே விழித்தெழு!!

  ReplyDelete
 4. I have appreciated above comments and congratulations to new members. SMS. Hassan & other's

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...