Pages

Saturday, January 9, 2016

அதிரையில் TNTJ கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' தெருமுனை பிராசாரக் கூட்டம் !

எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பெரிய நெசவுக்காரத் தெருவில் TNTJ அதிரை கிளை சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பிரசாரகரும், அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வருமாகிய அஸ்ரப்தீன் ஃபிர்தெளசி கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் மஹல்லாவாசிகள், தவ்ஹீத் ஜமாத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
  

1 comment:

  1. /ஷிர்க் ஒழிப்பு மாநாடு// எனக்கு ஒரு சந்தேகம். ஷிர்க்கை ஒழித்து, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள ‘வஹி மட்டும்’ போதும் என்பது தான் ததஜவின் நிலைப்பாடு. வஹி வராத ஸஹாபாக்கள் உள்ளிட்ட யாருடைய விளக்கமும் தேவையில்லைங்கிறது தான் ததஜ நிலைப்பாடு.

    அப்படியிருக்கும்போது, அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி‬யின் விளக்கத்திற்கும் ,ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கும் தேவை என்ன? வெறுமனே குரான் மற்றும் ஹதீஸ் தமிழாக்கம் மட்டும் போதுமல்லவா? குரானிலும் ஸுன்னாவிலும் போற்றிச் சொல்லப்பட்ட ஸஹாபாக்களின் விளக்கம் தேவையில்லை எனும்போது, ஃபிர்தௌஸி மற்றும் ததஜ அறிஞர்கள் (இவர்களுக்கும் வஹி வரவில்லை) உள்ளிட்ட யாரின் விளக்கத்திற்கும் தேவையில்லை என்பது தான் நீதமான நிலைப்பாடு. ததஜவினர் தங்களின் வஹி மட்டும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் தங்களின் பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் வெறும் குரான், ஹதீஸ் தமிழாக்கம் (வஹி மட்டுமே) தான் சொல்லப்படவேண்டும். வஹி வராத ததஜ அறிஞர்களின் விளக்கத்திற்கு எந்த தேவையும் இல்லை.

    குரான், ஹதீஸ் தமிழாக்கத்தை மக்களிடம் கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்யுங்கள். மக்கள் சொந்த விளக்கத்தில் புரிந்துகொள்வார்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...