Pages

Wednesday, February 3, 2016

வாகனம் மோதி மின்கம்பம் 3 துண்டுகளாக முறிந்தது: அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

அதிராம்பட்டினம், பிப் 03
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலை பெட்ரோல் நிலையம் அருகில் அமைந்துள்ள மின்கம்பத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் இன்று காலை போக்குவரத்து பாதிப்படைந்தது.

அதிரை  - பட்டுக்கோட்டை சாலை பெட்ரோல் நிலையம் அருகே உள்ள மின்கம்பத்தில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் பயங்கராமாக மோதியது. இதில் மின்கம்பம் மூன்று துண்டுகளாக முறிந்து சாலையோரத்தில் விழுந்தது. இதனால் அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கனரக பேருந்துகள் மாற்றுப் பாதையில் சென்றன.

இதனையடுத்து தகவலரிந்த மின்வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மின் இணைப்பை துண்டித்து கம்பிகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் போக்குவரத்து சீரானது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
 
 
 
 
 
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    புகைப்படங்களை பார்க்குபோதும், இவ்வழியே செல்லும் மின் கம்பிகள் குறைந்த (440-V) மின் அழுத்தத்தைக் கொண்டதாக இருக்கின்றது, இதுவே உயர் (11000-V) மின் அழுத்தத்தைக் கொண்ட மின் கம்பிகளாக இருந்திருந்தால், விபரீந்தங்கள் பல நடந்து இருக்கலாம், காரணம், பொதுமக்கள் பேரூந்துகள் என பரபரப்பாக இருக்கும் சாலை இது.

    இதுபோல் ஊரின் பல பக்கங்களிலும் பழுதடைந்த மின் கம்பங்கள் இருக்கின்றன. அவைகளை கால தாமதமின்றி மின் வாரியம் மாற்றி அமைத்துத்தரனும்.

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    (Non-Political Service Centre)
    State Executive Member
    Adirampattinam-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...