Pages

Tuesday, February 2, 2016

அதிரையில் ஒரே நாளில் 5 இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் !

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து சமய ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலைச் செய்ய கோரி வரும் பிப்ரவரி 7 ந் தேதி அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை, மதுரை மற்றும் கோவையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அதிரையின் பிரதான 5 இடங்களில் தெருமுனை பிரசாரங்கள் நடந்தது. மேலத்தெரு, செக்கடி மேடு, கிராணி கடை முக்கம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, அதிரை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடந்தது. இதில் தமுமுக  மாநில செயலாளர் பழனி பாஃருக் அவர்கள் 'கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஏன் ?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக - மமக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கோரிக்கை ஆர்பாட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் அதிரையின் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு நேரடியாக சென்று விநியோகிக்கப்பட்டன. இந்த பணியை தமுமுக - மமக மாணவரணி பொறுப்பாளர் செய்தனர். மேலும் அதிரை நகர தமுமுக - மமக சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்ட நிகழ்வு குறித்து அதிரை சுற்று வட்டார பகுதி அனைத்து சமய பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர், ஆட்டோ ஒலிபெருக்கி அழைப்பு உள்ளிட்டவை செய்து வருகின்றனர்.

1 comment:

  1. தமிழக சிறையில்; ஆயுள் கைதிகளை விடுவிக்க போராட்டமா? ஆட்சியில் அங்கம் வகித்திருக்கொண்டிருக்கும் போது இப்போ திடீரென போராட்டம் மக்களை வியப்படைசைகிறது . தேர்தல் நேரம் நெருங்குவதால் இதனை கையில் எடுக்கிறார்கள் ஆட்சியில் இடம் கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு அமைதியாக இருப்பார்கள். எல்லாத்துக்கும் காரணம் பதவி தான் வேறென்ன!

    சமுதாயத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தாலோ அல்லது குண்டாசில் கைது பண்ணினாலோ எந்த அமைப்பும் போராட்டம் நடத்தாது என்னவென்று விசாரிக்காது மாறாக தேர்தலில் சீட்டுக்காக மாவட்டத்தில் போராட்டம் ... அதற்கான பன்முனை பிரசாரம் இதனால் சிறையில் உள்ளவர்களுக்கு பலன் இல்லை.

    இந்திய பிரதமரை கொன்ற தீவிரவாதி அமைப்பில் கைதானவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் பொழுது போராட்டமும் காணோம்: அவர்கள் கைதிகளுக்காக இரண்டு மட்ட நீதிமன்றங்களில் அயராது வாதாடிக்கொண்டிருக்கும் பொழுது.... சிறையில் நம் சமுதாய மக்கள் ... நம் சமுதாய மக்கள் என்று தெருமுனை பிரச்சாரத்தால் ஒன்றும் பலன் கிடைக்கப் போவதில்லை... குறிப்பு :சீட்டு அதிகமாக கேட்டு வாங்கவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...