Pages

Wednesday, February 10, 2016

பத்திரப் பதிவு முறைகேட்டைத் தடுக்க நவீன முறை விரைவில் அறிமுகம்!

ஒரே சொத்தினை வெவ்வேறு அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்வதைத் தடுக்க பத்திரப் பதிவுத் துறை விரைவில் நவீன முறையை அறிமுகம் செய்யவுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவைப் பொறுத்தவரை இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஊருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு டிக்கெட் எடுக்கும்போது முன்பதிவு டிக்கெட் டுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வகையில் ரயில்வே துறையின் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுபோல எந்த ஊரில் உள்ள சொத்தையும் எந்த ஊரிலும் பத் திரப் பதிவு செய்யும் வசதி தற் போது உள்ளது. அதனால், ஒரு சொத்தினை வெவ்வேறு இடங் களில் விற்கும் முறைகேடான சில சம்பவங்களும் நடக்கின்றன. இதைத் தடுக்க பத்திரப் பதிவுத் துறை நவீன முறையை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான மென் பொருள் தயாரிக்கும் பணி நிறை வடையும் நிலையில் உள்ளது. நவீனமுறை அறிமுகம் செய்யப் பட்டதும், ஒரு சொத்து ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதும், தானியங்கி முறையில் உடனுக்குடன் பதிவேற் றம் செய்யப்படும். அதனால் அதே சொத்துக்கு வேறொரு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய முடியாது.

பத்திரம் பதியும்போது தாய் அல்லது மூலப் பத்திரம் இருந் தால்தானே பதிவு செய்ய முடியும். அப்படி இருக்கும்போது வெவ் வேறு இடங்களில் பத்திரம் பதிவு செய்வது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி சிலருக்கு எழும். அரசு புறம்போக்கு நிலங்களுக்கு தாய் பத்திரம் வழங்கப்படுவ தில்லை. ஒருவரிடம் உள்ள 10 ஏக் கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை மட்டும் அவர் விற்கலாம். அப் போது தாய் பத்திரத்தை அவர் தருவதில்லை. அந்த நிலத்தை கடைசியாக வாங்குபவருக்கே தாய் பத்திரம் கிடைக்கும். இது போன்ற இடங்களை வெவ்வேறு இடங்களில் பதிவு செய்து முறை கேடு செய்யும் அபாயம் உள்ளது.

தற்போது சார் பதிவாளர் அலு வலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அன்றைய தினம் மாலையில்தான் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், புதிய முறையில் தானி யங்கி முறையில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். அதனால் ஏற்கெனவே பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்தினை வேறு ஒரு இடத்தில் பதிவு செய்ய முடியாது. அவ்வாறு பதிவு செய்ய முற்பட்டால், அந்த சொத்து ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் சமிக்ஞை மூலம் தெரிய வருவதுடன், சம்பந்தப்பட்ட நபரும் பிடிபடுவார். இந்த நவீனமுறை விரைவில் அறிமுகமாகிறது.

இடம், நிலம், வீடு அல்லது குடியிருப்பு என எதனைப் பதிவு செய்தாலும் வாங்குபவரும், விற்பவரும் தற்போது நேரில் வந்து புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படும். செல்போன் எண் களும் பெறப்படுகிறது. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் முறை கேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பத்திரப் பதிவுத் துறையின் ஆவணங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கும் பணியை டிசிஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுத்ததும் நமது செல்போனுக்கு அந்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் வருவதுபோல, நமது சொத்தினை அபகரிக்கும் நோக்கில் யாராவது பத்திரம் பதிவு செய்ய முற்பட்டால், அப்போது கைரேகை “மேட்ச்” ஆகாது.

அதையடுத்து சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ்.-ல் அத்தகவல் அனுப்பப்படும். இதை வைத்து முறைகேட்டை தடுத்துவிட முடியும் என்று பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி:தி இந்து தமிழ்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...