Pages

Monday, February 22, 2016

துபாய் ஏர்போர்டில் தவறவிட்ட நகை, பணங்களை தேடிப் பிடித்து ஒப்படைத்த முத்துப்பேட்டை வாலிபர்

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியைச் சேர்ந்த பகுருதீன் மகன் யாசர் அரபாத்(27). இவர் துபாய் நாட்டில் பணி பரிந்து வருகிறார். விடுமுறையில் ஊர் திரும்புவதற்காக கடந்த 3-ம் தேதி துபாய் ஏர்போர்டிலிருந்து புறப்பட்ட அவர் 4-ம் தேதி அதிகாலை சென்னை வந்து சேர்ந்தார். அப்பொழுது தனது பேக்கை பரிசோதித்த போது மனிபர்சு ஒன்று இருந்தது. இதில் 2 பவுன் தங்க பிஸ்கட், 20 ஆயிரம் மதிப்புள்ள துபாய் நாட்டின் பணங்கள் மற்றும் சம்மந்தப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் கார்டு, அவர் பணி புரிவதற்கான அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்தது.

இதனைக் கண்ட யாசர் அரபாத் அதிர்ச்சி அடைந்து உரியவரிடம் சேர்க்க முயற்சித்து வீடு திரும்பினார். பின்னர் விட்டுசென்ற தொழிலாளி பணிப்புரியும் துபாயில் உள்ள கம்பெனிக்கு அவரது நண்பர் நவாஸ்கானை அனுப்பி வைத்து  அவர் மூலம் தொடர்புக்கொண்டு விட்டு சென்றவரின் செல்நம்பர் பெற்றார். பின்னர் பொருளை விட்டு சென்றவர் ஹைதராபாத், நிஜாம்பாத் மாவட்டம், ஆர்மூர் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயராம் மகன் சதாநாந்த்(50) என்று தெரியவந்தது. பின்னர் அவரை தொடர்பு கொண்டு யாசர் அரபாத் தன்னிடம் அந்த பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார்.

மகிழ்ச்சி அடைந்த சதாநாந்த் அவரின் உறவினர் ராகேசுடன் நேற்று தஞ்சாவூர், படடுக்கோட்டை வழியாக முத்துப்பேட்டைக்கு வந்து பின்னர் யாசர் அரபாத் வீட்டிற்கு வந்தார். அவரிடம் யாசர் அரபாத் தான் கண்டெடுத்த பொருட்களை சதாநாந்திடம் வழங்கினார். அப்பொழுது அவரின் தந்தை பகுருதீன,; நண்பர்கள் ஆதம் மாலிக், புரோஸ்கான், வர்த்தகக்கழக பொதுச் செயலாளர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். பொருட்களைப் மகிழ்ச்சியுடன் பெற்ற சதாநாந்த் கூறுகையில்: நான் 18 வருடங்களாக துபாயில் ஒரு கம்பெனியில் கார் கழுவும் கூலித்தொழில் செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நான் மிகவும் கஷ்டப்பட்டு குடும்பத்தை நடத்தி வருகிறேன்.

எனது பொருட்கள் காணாமல் போனதும் கவலை அடைந்தேன். இன்றைக்கு எனது உழைப்பு வீண்போகாமல் மனித நேயத்துடன் கடவுள் போன்று இந்த சகோதரர் எனக்கு மீட்டுத்தந்துள்ளார். அவரை வாழ்நாளில் மறக்கமாட்டேன் என்றார். இந்த நிலையில் பொருட்களை விட்டு சென்றவரை மனித நேயத்துடன் மிகவும் சிரமம்பட்டு கண்டுபிடித்து அவரிடம் சேர்த்த வாலிபர் யாசர் அரபாத்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள் பாராட்டினர்.

செய்தி: நிருபர் மொய்தீன் பிச்சை, முத்துப்பேட்டை

3 comments:

 1. நண்பர் பகுருதீன் அதிரை நிருபர் வலைதலத்தில்ல் என்னுடன் இணைந்து நேற்று இன்று நாளை தொடரை எழுதியவர்.

  மருமகன் யாசர் பாராட்டுக்குரியவர். அவரது நல்லெண்ணம் வாழ்க.

  ReplyDelete
 2. நண்பர் பகுருதீன் அதிரை நிருபர் வலைதலத்தில்ல் என்னுடன் இணைந்து நேற்று இன்று நாளை தொடரை எழுதியவர்.

  மருமகன் யாசர் பாராட்டுக்குரியவர். அவரது நல்லெண்ணம் வாழ்க.

  ReplyDelete
 3. அடுத்தவர் பொருளை எடுத்தால் அங்கேயுள்ள செக்யூரிட்டி இடமோ அல்லது அலுவலகத்திலோ கொடுத்து விட்டு போரவர்களையும் பார்க்கிறோம் அந்தப் பொருள் உரியவரிடம் சென்றடைந்ததா என்று யாருக்கும் தெரியாது. சிரமத்தை பாராமல் எடுத்தப் பொருளை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட சகோ. யாசர் அரபாத் செயல் பாராட்டக்கூடியதாக இருந்தாலும் சதாநாந்த் இச்சம்பவத்தை மற்றவரிடம் பகிறும்போது தமிழருக்கே பெருமை - தேடித்தந்து விட்டார் நமது சகோதரர் . கரவோசையுடன் வாழ்த்துக்கள்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...