Pages

Friday, February 5, 2016

எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி எழுதிய மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு நூல் வெளியீட்டு விழா ![படங்கள் இணைப்பு]

அதிரையைச் சேர்ந்த எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி எழுதிய மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு நூல் வெளியீட்டு விழா நேற்று 4/02/2016 வியாழக்கிழமை மாலை 4.30 அளவில் செக்கடிப் பள்ளி, ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் காதிர்  முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் S. K. M. ஹாஜா முகைதீன் M.A. B.T.  அவர்கள் தலைமையிலும் தமிழ்அறிஞர் அதிரை M. B. அஹமது B. A.  அவர்களின் முன்னிலையிலும்  சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை மற்றும் முத்துப் பேட்டையில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்துகொண்டார்கள். ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகம் நிரம்பி வழிந்தது.

வருகை தந்தவர்களை வரவேற்றுப் பேசிய ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இணை செயலாளர் நாவலர் S.M.K. நூர் முகமது B. Sc; அவர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தி  சிறந்த உரையாற்றியதுடன் எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் அதிரை நிருபர் மற்றும் அதிரை நியூஸ் வலைத்தளங்களில் எழுதிய எண்ணற்ற சமூக விழிப்புணர்வு  பொருளாதாரம் மற்றும்  ,  வரலாற்று ஆய்வு நூல்கள் மற்றும் கட்டுரைகளைப்  பட்டியலிட்டார்.

தலைமைதாங்கிய முன்னாள் தலைமை ஆசிரியர் அவர்கள் இந்திய சுதந்திரபபோராட்டத்தில் முஸ்லிம்களின் தியாகம் நிறைந்த பங்கை நினைவு கூர்ந்து மொகலாய மன்னர்களின் இறுதி வாரிசான மன்னர் பகதூர்ஷா அவர்களின் மகன்கள் தலைகள் அந்நியர்களால்  கொய்யப்பட்டு அவருக்கே பரிசாக அளிக்கப்பட்ட கொடுமையான நிகழ்வை குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து நூலாய்வு உரையை ஆற்றிய அதிரை  காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்  முனைவர் செய்யது அகமது கபீர் M. A. M. Phill, Ph.d;   அவர்கள் எழுத்தாளர்  இப்ராஹீம் அன்சாரி அவர்கள் இந்த நூலில் எடுத்தாண்ட ஆய்வுக்கு ஆதாரமான பல நிகழ்வுகளை விளக்கமாகக் குறிப்பிட்டு உணர்சிகரமாக உரையாற்றினார்.

அதற்கு அடுத்து முத்துப் பேட்டை அல்மகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்  ஹைதர் அலி DPE அவர்கள் நூலை  வெளியிட,  முதல் பிரதியை பேராசியர் M. A. முகமது அப்துல் காதர் M. A.  அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். தொடர்ந்து நூலாசிரியரின் உறவினரும் எழுத்தாளருமான முகமது பாரூக் அவர்களும், கணினி தமிழ் அறிஞர் ஜெமீல், முத்துபேட்டை அப்துல் அஜீஸ், எழுத்தாளர் P. பகுருதீன் மற்றும் இணைய தள நிர்வாகிகளும் நூலாசிரியரின் பால்ய நண்பர்களான பரக்கத் அலி, ஜெயினுல்  ஆபிதீன் போன்றவர்கள் சிறப்புப் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.

நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசிய Dr. ஹைதர் அலி அவர்கள் நாட்டில் நிலவும் சூழலில் இத்தகைய நூல்கள் எவ்வாறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உதவுமென்றும் சமுதாய ஒற்றுமையை வலியுறுத்தியும் பேசினார். விழாவில் நூலாசிரியருக்கும் மற்ற சிறப்பு விருந்தினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேராசிரியர்  M. A. அப்துல் காதர் M. A. M. Phill   அவர்கள் வாழ்த்துரை வழங்கி எவ்வாறெல்லாம் தியாக வரலாறுகள் மறைக்கப்பட்டு இருக்கின்றன என்றும் அவற்றை ஆய்வு செய்து நூலாக வெளிக் கொண்டுவந்த நூலாசிரியரைப் பாராட்டியும் பேசினார்.

அடுத்ததாக நூலாசிரியர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் சுருக்கமான ஏற்புரை ஆற்றினார்.  தனது உரையில் தனக்கு இந்த விழா சிறப்புற நடைபெற பலவகையிலும் உதவிய அதிரை நியூஸ் நிர்வாகியான ஷேக்கனா நிஜாமுக்கு நன்றி கூறினார்.  அதனைத் தொடர்ந்து காதர்  முகைதீன் உயர்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியர்  ஹாஜி A. மகபூப் அலி M.Sc; M. Ed; M. Phill அவர்கள் நன்றி உரை ஆற்ற  விழா இனிதாக நிறைவுற்றது.

விழாவில் அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் S. H. அஸ்லம், கோட்டை அமீர்  விருது பெற்ற அபூபக்கர், லயன் அக்பர் ஹாஜியார்  , சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள், வலைதள நிர்வாகிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 

10 comments:

 1. அதிரைநியூஸ் தன்னை மறுபடியும் ஒரு நடுநிலை என்பதை உறுதி செய்து கொண்டது jessakkala nizam idrees

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.

  பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி, அவன் பாடாத பாட்டு தாலாட்டு.

  இது எத்தனை பேருக்கு தெரியும்?


  சகோதரர், அதிரை. இப்ராஹீம் அன்சாரி M.Com.,
  அவர்கள் எழுதிய “மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு” நூல் வெளியீட்டு விழாவுக்கு அன்பான அழைப்பின் பெயரில் நானும் நயமுடன் நன்றாக சென்றிருந்தேன்.

  முதலில் கனிவான வரவேற்பு, மனதை குளிரச் செய்தது.

  பிறகு நாவுக்கு இனிவான உபசரிப்பு, மனதை இனிக்கச் செய்தது.

  அதன் பிறகு செவிகளுக்கு பல கலைஞர்களின் துல்லியமான துள்ளலான ஒலி அலைகள், மனதை வியக்க செய்தது.

  இறுதியில் நூல் வெளியீடு, மனதை பிரமிக்கச் செய்தது.

  கடைசியாக(10.15PM-04-Feb-2016)இரவின் மடியில் அமர்தவன் நான் அந்த நூலை படிக்க ஆரம்பித்தேன், படித்துக் கொண்டிருந்தேன், இரவு சாப்பாட்டை மறந்தேன், அந்த அளவுக்கு மெய் மறக்கச் செய்து விட்டது அந்த நூல்.

  ஒரு படைப்பு என்பது இலேசான காரியம் இல்லை என்றாலும், சகோதரர், அதிரை. இப்ராஹீம் அன்சாரி அவர்களின் இந்த படைப்பு எளிதில் புரியும் வண்ணம் நேர்த்தியாக பல சாட்ச்சியங்களை கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

  சகோதரர் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.

  K.M.A. Jamal Mohamed.
  President – PKT Taluk.
  National Consumer Protection Service Centre.
  (Non-Political Service Centre)
  State Executive Member
  Adirampattinam-614701.

  ReplyDelete
 4. இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களின் புக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதும், அதுவும் இச் சங்கத்தில் நடந்தது மிக்க மகிழ்சி அளிக்கிறது. இது போன்ற அரிய பல நிகழ்வுகள் நடந்திட அல்லாஹ் ஆரோக்கியத்தை உங்களுக்கு தருவானாக!

  ReplyDelete
 5. பதிவுக்கு நன்றி.சகோதரர் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன். 

  ReplyDelete
 6. இந்த நூல் வெளியீட்டு விழாவை சிறப்புடன் நடத்திட ஒவ்வொரு காரியங்களிலும் ஈடுபாட்டோடு உழைத்த அதிரை நியூஸ் நெறியாளர் தம்பி ஷேக்கனா நிஜாம் அவர்களுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய மரைக்கா இத்ரீஸ் மற்றும் ஜபருல்லாஹ் மற்றும் அன்சாரி , அப்ரித் ஆகியோருக்கும் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் இவர்கள் மனதார செய்த பணிகள் மறக்க இயலாதவை.

  முதல் வரிசையில் வந்து அமர்ந்து சிறப்பித்த தம்பி முசெமு ஜகபர் அலி, கோ. மு. ஜமால் ஆகியோருக்கும் நன்றி.

  இந்த விழாவில் கலந்து கொண்ட அதிரை பேரூராட்சி மன்றத் தலைவர் அவர்களுக்கும், நாச்சி குளத்திலிருந்து வந்து சிறப்பித்த மூத்த வழக்கறிஞர் அஷ்ரப் அலி முத்துப் பேட்டை பூக்கொய்யா, தெ.சி. சாகுல் ஹமீது மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.

  தம்பி ஜலீல்! தங்களின் வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 7. முகநூல் பதிவாளர் தம்பி அன்வர்தீன் அவர்களை இந்த விழாவில் சந்தித்தது மிகவும் மகிழ்வாக இருந்தது.

  ReplyDelete
 8. முகநூல் பதிவாளர் தம்பி அன்வர்தீன் அவர்களை இந்த விழாவில் சந்தித்தது மிகவும் மகிழ்வாக இருந்தது.

  ReplyDelete
 9. சகோதரர் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்.

  Reply

  ReplyDelete
 10. அதிரை. இப்ராஹீம் அன்சாரி அவர்களின் இந்த படைப்பு எளிதில் புரியும் வண்ணம் நேர்த்தியாக பல சாட்ச்சியங்களை கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

  சகோதரர் அவர்களை பாராட்டி வாழ்த்துகிறேன்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...