Pages

Monday, February 22, 2016

துபாயில் வெளிநாடு செல்லும் தொழிலாளர் நலன் குறித்த கருத்தரங்கம் !

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இந்தியாவிலிருந்து வேலை வாய்ப்புகளுக்காக ஐக்கிய அரபு எமிரெட்சுக்கு செல்கின்றனர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி  சில இடைதரகர்கள்  அவர்களை தவறாக வழிநடத்துகின்றனர். அதிகமாக கமிசனை  இவர்கள் பெற்று  நிர்ணயிக்கப்பட்ட‌ சம்பளத்தை கூடுதலாக தெரிவித்து  ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விடுகின்றனர். மேலும் சிலர் முறையான பயிற்சி பெறாமல் குறிப்பிட்ட வேலைக்கு போலியான அனுபவ சான்றிதழ்களுடன் அனுப்பி விடுகின்றனர்.இதனால் அமீரகம் வந்த பின் அந்த தொழிலாளர்கள் தேவையற்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையை மாற்றுவதற்கு இந்திய வெளியுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெளிநாடு இந்திய நலத்துறை திறன்மிகு பயிற்சி மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயிற்சி மையம் மூலம் தொழிலாளர்களுக்கு சிறப்புடன் பயிற்சியளிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அமீரகம் செல்லும் தங்கள் மாநில தொழிலாளர்களின் தொழில் திறமையை மேம்படுத்தும் வகையில் உத்தர பிரதேச அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா மற்றும் தெலுங்கானா  அமைச்சர்  நைனி நரசிம்ம ரெட்டி ஆகியோர் தலைமையில் இரண்டு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் துபாய் வருகை தந்தனர் .

துபாய் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து,அந்ததந்த நிறுவனங்களுக்கு தேவையான தொழிலாளர்கள் பற்றி விபரங்களை கேட்டறிந்தனர். என்ன பணிகளுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை அறிந்து கொண்டார்கள் மேலும் அதெற்கேற்ப செயல் திட்டம் வகுக்கப்பட்டு செயல்பட உள்ளார்கள் இதன் மூலம்  அதற்கேற்ப அந்தந்த மாநில தொழிலாளர்கள் தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் வெளிநாடுகள் செல்லும்போது பிரச்சனைகள் ஏற்படாமல் பணிபுரிய முடியும்

துபாயில் உத்தர பிரேதசத்தை சேர்ந்த அமைச்சர் அபிஷேக் மிஷ்ரா கூறியதாவது:
கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவில் இருந்து  மத்திய கிழக்கு நாடுகளுக்கு 8 லட்சம் பேர் பணியாற்ற வந்துள்ளனர்.இதில் 2 லட்சம் பேர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் தொழிலாளர்கள் இவர்களின் நலனை மேம்படுத்தும் வகையில் இவர்களுக்குதேவையான வழிகாட்டுதல்களை தந்து அவர் வாழ்வாதாரம் மேம்பட செயவோம்  என்றார்.

இது போன்று தமிழக அரசும் தங்களது பிரதிநிதிகளை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வெளிநாடு செல்லும் ஆயிரக்கணக்கான‌ தமிழக தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த வேண்டும் என வெளிநாட்டு வாழ் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நன்றி:தினகரன் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...