Pages

Sunday, February 7, 2016

அதிரையில் உலக தரத்தில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் திறப்பு !

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் 07.02.2016 ஞாயிறன்று 'ரிச் வே'  என்ற பெயரில் உலக தரத்துடன் கூடிய புதிய ரெஸ்டாரெண்ட் உதயமாகியுள்ளது.

ஞாயிறு காலை 10:00 மணிக்கு தொலைக்காட்சி புகழ் செஃப் தாமோதரன் இந்த ரிச் வே ரெஸ்டாரெண்டை திறந்து வைத்தார். கிராத்துடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை பேரா. முஹம்மது அப்துல் காதர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கி சிறப்புரையும் ஆற்றினார்.

இந்த ரெஸ்டாரெண்டில் உலகத்தரத்துடன் கூடிய அனைத்து வகையான சைவ, அசைவ உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

குளிர் சாதன வசதியுடன் 200 பேர் இருக்கைகள் கொண்ட அரங்கம், திறந்த வெளி டைனிங் ஹால் மற்றும் குளிர் சாதன டைனிங் ஹால் என இந்த ரெஸ்டாரெண்ட் களைகட்டுகிறது.

பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ரெஸ்டரெண்ட் இதுவே எனக் கூறப்படுகிறது.

இந்த ரெஸ்டாரெண்டின் உரிமையாளர் பிரபல அல் நூர் ஹஜ் சர்வீஸ் உரிமையாளர் முஹம்மது அலி என்பது குறிப்பிடத்தக்கது.



1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...