Pages

Wednesday, February 3, 2016

கலாமின் பிறந்த நாளை தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி முதியவர் சைக்கிள் பயணம்: காவல் நிலையத்தில் அதிரை சேர்மன் வரவேற்பு!

 
அப்துல்கலாம் பிறந்த நாளான அக். 15 ஆம் தேதியை  தேசிய மாணவர் தினமாக அறிவிக்கக் கோரி, புதுதில்லியிலிருந்து ராமேசுவரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சென்னையைச் சேர்ந்த கஜேந்திரனுக்கு அதிரையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் லாங்மார்ச் கஜேந்திரன் (63). இவர், இந்திய தேசிய மக்கள் நலன் ஆர்வலர் அமைப்பைச் சேர்ந்தவர். குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த நாளான அக். 15 ஆம் தேதியை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, புதுதில்லியில் இந்தியா கேட் அருகிலிருந்து ராமேசுவரம் வரையிலான சைக்கிள் பயணத்தை கடந்த அக் 15 ஆம் தேதி தொடங்கினார்.

டெல்லியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கிய கஜேந்திரன், உத்தரப்பிரதேசத்தின் மதுரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் வழியாக சென்னை வந்து அங்கிருந்து ஈசிஆர் சாலை வழியாக கடலூர், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை வழியாக அதிரை காவல் நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஹெச் அஸ்லம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிரை காவல்துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
 

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    இது இலேசான காரியம் இல்லை,
    செய்திட மனம் வரணும்,
    அதோடு தன்னம்பிக்கை வரணும்,
    தன்னம்பிக்கை வந்து விட்டால்!
    உடல் தானாகவே பெலன் பெற்று விடும்.

    இருக்கின்ற பெலத்தோடு, இன்புற்று உங்கள் பயணம் தொடர என்னுடைய வாழ்த்துகள்.

    இறைவன் நாடினால், ஒரு நாள் சந்திக்கலாம்.

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    (Non-Political Service Centre)
    State Executive Member
    Adirampattinam-614701.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...