Pages

Saturday, February 6, 2016

தஞ்சை இஸ்திமா: மாநாடு துளிகள் !

தஞ்சை கிரீன் சிட்டி மைதானத்தில் நேற்று [ 05-02-2016 ] மாலை அஸர் தொழுகையிலிருந்து இன்று [ 06-02-2016 ] இரவு இஷா தொழுகை வரை இரண்டு நாள் தப்லீக் இஸ்திமா மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு தொடர்ந்து சொற்பொழிவு ஆற்றினார்கள். குறிப்பாக இறையச்சம், வாழ்வியல் நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. வருகையாளர்கள் அனைவரும் பந்தலில் அமர்ந்து சொற்பொழிவுகளை அமைதியாக கேட்டனர். பந்தல் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தன.

மாநாடு துளிகள்:
1. மாநாட்டில் கொடி, ஆடம்பர தோரணங்கள் இல்லை, பிரமாண்ட பந்தல் அலங்காரமில்லை. பிளக்ஸ் பேனர்கள் எங்கும் தென்படவில்லை. அதிகப்படியான போலீஸ் பாதுகாப்புமில்லை. எந்தவித சலசலப்புமில்லை.

2. மாநாட்டில் மார்க்க சொற்பொழிவாளர்களின் பெயர்கூட அறிவிக்கப்படவில்லை.

3. மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருகை தந்தனர்.

4. தஞ்சை, கும்பகோணம், அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியினருக்கு தனித்தனியே பந்தல் அமைக்கப்பட்டு அதில் 3 வேலை உணவு பரிமாறப்பட்டது. பலர் நீண்ட வரிசையில் பொறுமையுடன் நின்று ஒவ்வொருவராக பந்தல் உள்ளே சென்று 4 பேராக அமர்ந்து சஹனில் ஒன்றாக உணவருந்தினர்.

5. பரந்த மைதானமாக அமைந்து இருந்ததால் இட நெருக்கடி மற்றும் வாகன நெருக்கடி ஏற்படவில்லை.

6. மாநாடு நிறைவு துஆவின் போது ஏராளமானோர் கலந்துகொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த பிரார்த்தனையில் பலர் கண்கலங்கி இறைவனிடம் இருகரமேந்தி வேண்டினர்.

7. ஒளு, கழிவறை, சிறுநீர் கழிக்க தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

8. இந்த மாநாட்டில் அதிராம்பட்டினத்திலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாநாட்டில் அதிரையர்கள் கூட்டம் அதிகமாக தென்பட்டது.

9. மாநாட்டில் இஸ்லாமிய புத்தகங்கள் மற்றும் தொப்பி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் பழங்கள், குளிர் பானங்கள், தின்பண்டங்கள் தனி ஸ்டால்கள் அமைத்து விற்பனை செய்யப்பட்டன.

10. தன்னார்வலர்கள் பலர் மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு சேவை பணிகளை அதிக ஈடுபாடுடன் செய்தனர்.

11. இஸ்திமா மாநாடு அழைப்பு பணிக்காக துண்டு பிரசுரங்கள், பிளக்ஸ் பேனர்கள், வால் போஸ்டர், தொலைக்காட்சி விளம்பரம் எதுவுமில்லாமல் பல்லாயிரக்கணக்கானோர் மாநாட்டில் ஒன்று கூடியது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

- அபூ அஜீம்
 

2 comments:

  1. சலாம் சகோ. இந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இது போன்ற விளம்பரங்களை எதிர்ப்பார்க்க மாட்டார்கள் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை மாறாக அவர்களின் எண்ணமெல்லாம் நாமும் அவர்களைவிட சிறந்த தாயியாக மாறி இந்த உம்மத்தை பற்றிய கவலை வரவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் நல்ல எண்ணங்களை வரவேற்று நம்மால் முடிந்த பங்களிப்பை முடிந்தளவு செய்ய முயற்சிப்போமே இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.....

    ReplyDelete
  2. சலாம் சகோ. இந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இது போன்ற விளம்பரங்களை எதிர்ப்பார்க்க மாட்டார்கள் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை மாறாக அவர்களின் எண்ணமெல்லாம் நாமும் அவர்களைவிட சிறந்த தாயியாக மாறி இந்த உம்மத்தை பற்றிய கவலை வரவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம் நல்ல எண்ணங்களை வரவேற்று நம்மால் முடிந்த பங்களிப்பை முடிந்தளவு செய்ய முயற்சிப்போமே இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...