Pages

Tuesday, February 9, 2016

பட்டுக்கோட்டையில் நடந்த மக்கள் நல கூட்டணி பொதுக்கூட்டம் !

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மக்கள் நல கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஎம் ன் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், சிபிஐ யின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் அவர்களது கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மதிமுக நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார், சிபிஐ மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமை வகித்தார். மதிமுக மாவட்ட செயலாளர் உதயக்குமார், சிபிஎம் மாவட்ட செயலாளர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரசமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்கூட்டத்தில் மக்கள் நல கூட்டணியின் பட்டுக்கோட்டை, மதுக்கூர், சேதுபவாசத்திரம், பேராவூரணி, திருவோணம் மற்றும் ஒர்ததநாடு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நான்கு தலைவர்களும் தங்களின் மாற்று அரசியல் பற்றி பேசினர். முடிவில் பேசிய மதிமுக பொது செயலார் வைகோ. தான் பல ரணங்களையும், வலிகளையும் கடந்து வந்தவர் என்றும், 29 ஆண்டுகள் கழகம் தான் எல்லாம் என வாழ்ந்த தன் மீது கொலை பழி சுமத்தி தன்னை கட்சியை விட்டு வெளியேற்றிய போது தன் வாழ்வின் மிக பெரிய வலியை உணர்ந்ததாகவும், அதை போல குறிப்பிட்டு சொல்லக்கூடிய சில ரணங்களில் பட்டுக்கோட்டை முன்னால் சேர்மன் விசுநவாதனின் மறைவு தன்னை மிகவும் பாதித்திதாகவும், மதிமுக தொடங்கிய காலத்தில் பட்டுக்கோட்டை வந்த போது யானை ஊர்வலம் வைத்து வரும் வழியெல்லாம் பூக்கள் தூவி அவர் கொடுத்த வரவேற்பு தன் வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார்.

தன் வாழ்நாளில் கண்ணியத்தை காத்து வருவதால் தான், அதிர்ஷ்டம் இல்லாதவர் வைகோ, தேர்தல் கலத்தில் பெரிதாய் வெற்றி வாய்ப்பை ருசிக்காதவர், கூட்டனியை தேர்ந்தெடுக்க தெரியாதவர் என பல்வேறு வகையில் விமர்சிக்கும் பொதுமக்கள் வைகோ நல்லவர் , தரமானவர் என்ற விமர்சனத்தை முன் வைக்கும் வகையில் வாழ்ந்து வருகினறேன். நாளை நான் இறந்த பிறகு நான் நேர்மையாளன் என் பெயர் நிலைக்கவே விரும்புகின்றேன். நேர்மையான ஒரு கூட்டணியால் தான் நேர்மையான ஒரு ஆட்சியை வழங்க முடியம் என பேசினார். இரவு 10 மணிக்கு துவங்கிய பொதுக்கூட்டம் நள்ளிரவு 12 மணியை கடந்து நடந்து முடிந்தது அதுவரை கூட்டம் கலையவில்லை என்பது மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...