Pages

Saturday, February 6, 2016

தாய்ப்பாலின் அவசியம்: அதிரை M F முஹம்மது ஹுசைன்( மருத்துவ மாணவர்)

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும். அல் குர்ஆன் 2:233

அழகு குறைந்துவிடும் என்ற தவறான எண்ணத்தாலும், தாய்ப்பால் சுரப்பு பற்றாகுறையாலும் பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தவறுகின்றனர்.

தாய்ப்பால் நம் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் அவசியம்.  நம் குழந்தைகள் ஒவ்வாமை (Allergy), சளி மற்றும் சில நோய்களினாலும் அன்றாடம் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் இம்மியுனோகுலோபுலின் A (Immunoglobulin A) என்ற நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறைவாக உள்ளதே.  இது உமிழ்நீர், கண்ணீர், செரிமான உறுப்புகள், சுவாசக்குழாய், இனப்பெருக்க பாதை, சீம்பால் போன்றவற்றில் அதிகமாக காணப்படுகிறது.

இம்மியுனோகுலோபுலின் A (Immunoglobulin A) அளவு உடலில் அதிகமாக இருக்கும் பட்சத்தில், வெளி எதிர்செனி (Foreign Antigen) நம் உடம்பிற்கு வரும்போது, அதற்கு எதிராக இம்மியுனோகுலோபுலின் A (Immunoglobulin A) போராடுகிறது. இம்மியுனோகுலோபுலின் A (Immunoglobulin A) அளவு உடலில் குறைவாக இருக்கும் பட்சத்தில் உடலில் இருக்கும், இம்மியுனோகுலோபுலின் E (Immunoglobulin E) என்ற ஒருவித புரதசத்து வெளி எதிர்செனி (Foreign Antigen)க்கு எதிராக போராடுகிறது. பின்பு அது மாஸ்ட் செல் (Mast Cell) மற்றும் பேசிநோபில் செல் (Basinophil Cell) எனும் செல்களிருந்து ஹிஸ்டமின் (Histamine) மற்றும் இதர வேதிப்பொருள்களை உற்பத்திசெய்ய தூண்டுகிறது.  இதனால் ஒவ்வாமை (Allergy), மூக்குசளி (Runny Nose), ஆஸ்துமா (Asthma), அரிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் நோய் (Urticaria), சளிக்காய்ச்சல் (Hay Fever), சுவாசக் கோளாறுகள் (Resipratory Problems), சிரங்கு (Eczema) போன்ற Hypersenitivity Reaction – Type I எதிர்வினை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இம்மியுனோகுலோபுலின் A (Immunoglobulin A) தாய்ப்பாலின் மூலம் குழந்தைக்கு செல்வதால், குழந்தையை வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான பிரச்சனைகளிலிருந்து காப்பதோடு, இம்மியுனோகுலோபுலின் A (Immunoglobulin A) அளவை குழந்தையின் உடலில் அதிகப்படுத்தி எதிர்காலத்தில் Hypersenitivity Reaction – Type I எதிர்வினை தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.

அன்றாட உணவு முறை மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் ப்ரோலக்டின் ஹார்மோன் (Prolactin Hormone) அளவு குறைவதால் தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடுகிறது. இக்குறைபாட்டை Human Prolactin Hormone ஊசிகள் போடுவதின் மூலம் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க முடியும்.  ஆனால் இதனால் ஏற்படும் ஒரு சில பக்கவிளைவுகளை கருத்தில் கொண்டு நம் நாட்டில் இம்முறையை பயன்படுத்துவதில்லை, எனினும் ஒரு சில நாடுகளில் இம்முறையை பயன்படுத்துகிறார்கள்.

மன அழுத்தத்தை குறைத்தல், முறையான தூக்கம், அதிகம் தண்ணீர் உட்கொள்ளல், ஓட்ஸ், பச்சை பப்பாளி, எள் விதைகள், வெந்தையம், பச்சை இலை காய்கறிகள், பூசணிக்காய், பருப்புவகைகள் மற்றும், பழங்கள் சாப்பிடுவதன் மூலமும், முறையாக மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையோடும் தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்த முடியும்.

விழிப்புணர்வோடு இருப்போம், சந்ததிகளை நோயிலிருந்து காப்போம்.

- அதிரை M F முஹம்மது ஹுசைன் 
( மருத்துவ மாணவர் )

3 comments:

  1. இன்றைய நாகரிக காலத்தில் தேவையான விழிப்புணர்வு ஒரு தகுதியான எதிர்கால மருத்துவரிடமிருந்து வந்திருப்பதை உணர்ந்து அவரது ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்.

    ReplyDelete
  2. நல்லது. வளர வாழ்த்துக்கள் ஹுசைன் டாக்டர்!

    ReplyDelete
  3. Dr.Hussain indeed a good article!!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...