Pages

Monday, March 7, 2016

தேர்தல் தொடர்பான புகார்களை 1077-ல் தெரிவிக்கலாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான என். சுப்பையன்.

மாவட்ட ஆட்சியரகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த அறையில் அலுவலர்கள் பணிபுரிவதை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். அப்போது, அவர் தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

மேலும், தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் பணியைப் பார்வையிட்டார். தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களைப் பறக்கும் படையினரின் கண்காணிப்பில் அழிக்கும் பணி மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கீழ வஸ்தா சாவடியில் காவல் துறையினரும், பறக்கும் படையினரும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...