Pages

Friday, March 4, 2016

மார்ச் 6- ல் ஓமன் நாட்டு வேலைவாய்ப்பு முகாம் !

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6 ஆம் தேதி ஓமன் நாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் துணை இயக்குநர் கு. கலைச்செல்வன் தெரிவித்திருப்பது:
ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்துக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடனும், இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடனும் 22 முதல் 32 வயதுக்குள்பட்ட இயந்திரம் இயக்குபவர்கள் தேவைப்படுகின்றனர்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கு ஏற்ப ரூ. 25,000 வரை ஊதியம்,இருப்பிடம்,இலவச விமானப் பயணச் சீட்டு, அந்நாட்டின் சட்ட திட்டத்துக்குள்பட்ட இதர சலுகைகளும் வழங்கப்படும்.

தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் அசல் பாஸ்போர்ட், சுய விவரக் குறிப்புடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள், நீல நிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட 5 புகைப்படங்களுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மார்ச் 6-ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறும் முதல் கட்டத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044 - 2250 5886, 2250 2267 ஆகிய எண்களிலோ,வலைதளம் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. Muttrah கார்னிஷ் படம் அருமை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...