Pages

Saturday, March 5, 2016

ஒரு மாத சிறை: வாட்ஸ் அப் யூஸர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

அரசியல் தலைவர்களை வாட்ஸ் அப்பில் இழிவாகச் சித்தரித்தால் ஒரு மாதம் சிறை செல்ல நேரிடும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு வரும் மே மாதம் 16 ம் தேதி  நடை பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

"தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலுக்கு வந்துள்ளதால் கண்காணிப்பு  பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அரசியல் கட்சியினர் சுவர்களில் எழுதியுள்ள விளம்பரங்களை அழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் ஊழியர்களை நியமித்து  அழிக்கும். இதற்கான செலவு அரசியல் கட்சிகளிடம் வசூலிக்கப்படும்.

அரசியல் கட்சி தலைவர்களைத்  தனிப்பட்ட முறையில் இழிவாக விமர்சனம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிக அளவில் இழிவான விமர்சனங்கள் வருவதாக புகார்கள் வருகின்றன. இவற்றைக்  கண்காணிக்க  தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக புதிதாக சாப்ட்வேர் வாங்கி அதன் மூலம் கண்காணிக்கிறோம்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி  வாட்ஸ் அப்பில் தலைவர்களை இழிவாக  விமர்சனம் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் 188 வது பிரிவின்கீழ் 1 மாதம் சிறைத்  தண்டனை அல்லது ரூ. 200 அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படுகிறது.தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள், ஊழியர்கள் நடைமுறைகளை மீறி அரசியல்வாதிகளைச் சந்தித்தால் அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை தீவுத்திடல் அரசு பொருட்காட்சியில் அரசின் சாதனைகளை  அரசு செலவில் விளம்பரப்படுத்தப்படுவதாக வந்துள்ள புகார் குறித்தும் விசாரிக்க இருக்கிறோம். தேர்தல் ஆணையம் விதிப்படி அரசு சாதனைகளை இப்போது அரசு செலவில் விளம்பரப்படுத்தக் கூடாது.திமுக தரப்பில் இன்று 3 புகார் மனுக்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதை அரசு துறைக்கு அனுப்பி விளக்கம் கேட்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...