Pages

Friday, March 11, 2016

ரிச்வே கார்டனில் நடந்த லயன்ஸ் சங்க கூட்டத்தில் சாதனையாளர்கள் கெளரவிப்பு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் அலுவல் பூர்வ வருகை கூட்டம் இன்று இரவு பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ரிச்வே கார்டனில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் என் ஆறுமுகச்சாமி தலைமை வகித்து வரவேற்புரை ஆற்றினார். லயன்ஸ் சங்க செயலர் பேராசிரியர் என்.எம்.ஐ அல் ஹாஜி, பொருளாளர் எஸ்.ஏ.சி இர்பான் சேக், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி, எஸ்.எம். முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, எம். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் எஸ் வேதநாயகம் அலுவல் பூர்வ ஆய்வை துவக்கி வைத்து, நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். இதில் என்.யூ ராமமூர்த்தி ( பி.எம்.ஜே.எஃப் ) அளித்த ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள பீரோல், மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்கள் அதிரை அருகே உள்ள ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டது.

கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற ஹாஜி எம்.பி அபூபக்கர் அவர்களை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற உள்ள முனைவர் அக்பர் உசேன் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆளுநர் எஸ். வேதநாயகம் அவர்களின் சேவையை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட டி.பி.கே ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் முனைவர் மேஜர் எஸ்.பி கணபதி சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பேராசிரியர் முனைவர் கே.செய்யது அகமது கபீர் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கத் தலைவர் என். ஆறுமுகச்சாமி, செயலாளர் பேராசிரியர் என்.எம்.ஐ அல் ஹாஜி, பொருளாளர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் ஆகியோர் செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஊர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், அதிரை லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், லியோ சங்க உறுப்பினர்கள், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, பரக்கலக்கோட்டை லயன்ஸ் சங்க நிர்வாகிகள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...