Pages

Thursday, March 10, 2016

அதிரை பைத்துல்மாலில் பெண்களுக்கான சிறப்பு தையல் பயிற்சி பள்ளி துவக்கம் !

அதிரை பைத்துல்மால் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு பொதுநல சேவைகள் தொய்வின்றி செய்து வருகிறது. குறிப்பாக வட்டியில்லா நகைக் கடன் வழங்கும் திட்டம், கைவிடப்பட்ட முதியோர்கள், விதவைகள் ஆகியோருக்கான பென்ஷன் வழங்கும் திட்டம், ஏழைக்குமர்களுக்கான திருமண உதவி வழங்கும் திட்டம், வறிய மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி வழங்கும் திட்டம் மற்றும் மருத்துவ உதவி சுன்னத் உதவி ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிரை பைத்துல்மாலின் மற்றுமொரு பொதுநல சேவையாக பெண்களின் சுய தொழில் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் தையல் பயிற்சி அளிக்கும் திட்டத்தை நேற்று முதல் தொடங்கியது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சி அதிரை பைத்துல்மாலில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி அப்துல் ஹமீது தலைமை வகித்தார். அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தையல் பயிற்சி பள்ளியை அதிரை பைத்துல்மால் துணை தலைவர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் திறந்து வைத்தார். முன்னதாக மவ்லவி அப்துல் காதர் ஆலிம் கிராத் ஓதி சிறப்பு பிரார்த்தனை செய்தார். இந்நிகழ்ச்சியில் அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெண்களுக்கு தையல் பயிற்சி பள்ளியை தொடங்கியது குறித்து அதிரை பைத்துல்மால் செயலாளர் ஹாஜி அப்துல் ஹமீது நம்மிடம் கூறுகையில்...
அதிரை பைதுல்மால் அலுவலகத்தின் முதல் மாடியில் தையல் பயிற்சி பள்ளி இயங்குகிறது. பயிற்சியை பெண் பயிற்சியாளர் வழங்க இருக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்பு நடைபெறும்.

முதல் ஒரு மணி நேரத்திற்கு மெஷின் பயிற்சி அளிக்கப்படும் பின்னர் இதர பயிற்சி வழங்கப்படும். குறைந்த மாதக்கட்டணமாக ரூ 150 செலுத்த வேண்டும். மொத்தம் 6 மாதங்கள் பயிற்சி அள்ளிக்கப்படும். பயிற்சி முடிவில் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்ப்பை ஓய்வில் இருக்கும் குடும்ப பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் அதிரை பைத்துல்மாலில் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.
 

3 comments:

  1. Thanks to Adirai baitulmal for low cost training . school students also use this opportunity for them future. Alhamthulillah.

    ReplyDelete
  2. வேலை இல்லாதவர்களுக்கு ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுக்க நல்லதொரு வாய்ப்பு என்று சொல்லலாம். ஆரம்ப பயிற்சி முடித்து தன் கற்பனை திறமையால் டிசைன் பண்ணி அதிக வருவாய் பெற ஆரம்ப பள்ளி இதுவே. குறைந்த செலவில் இப்படியொரு பயிற்சி வேறிடத்தில் கிடைக்கவே கிடைக்காது. சமுதாய நலன்கருதி வேலைவாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் பைத்துமால் செயல் பாராட்டக்கூடியதே - சேவைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்து௧்௧ள்,மாஷாஅல்லாஹ்,சேவைகள்
    மேலும் செழிக்கட்டும்
    வாழ்த்தும்,
    ABM ரியாத் கிளை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...