Pages

Tuesday, March 15, 2016

ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்?

தகவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது  இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள், மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன.

இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப்,  ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதுவும் சமீபத்தில் ஐ-ஓ.எஸ்சில் ஏற்படுத்தப்பட்ட அப்டேட்கள் இதன் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளன.

வீடியோ ஓடையில் ஜூம் செய்வது, அதிக பேக் கிரவுண்ட் ஆப்ஷன்கள் மற்றும் பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்பும் வசதி என நிறைய அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. கூகுள் டாக்குமென்ட், ஐ கிளவுட் மற்றும் டிராப் பாக்ஸ் போன்ற ஆப்களின் உதவியோடு பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பைல்களை அனுப்பவே ஜி-மெயில் போன்ற இன்டெர்நெட் மெயில் சர்வீஸ்கள் உபயோகப்பட்டுவந்த நிலையில்,  வாட்ஸ்-அப்பிலேயே இந்த வசதி வந்திருப்பது, நமது தொடர்பு முறையை மேலும் எளிதாக்கிவிடும். இனிமேல் லாக்-இன் செய்து மெயில் கம்போஸ் செய்யத் தேவையில்லை. வழக்கமாக நாம் எந்நேரமும் சேட் செய்து கொண்டிருக்கும் வாட்ஸ்-அப்பிலேயே அனைத்தையும் முடித்துவிடலாம். குரூப் மெயில் அனுப்ப நினைத்தால்,குரூப் சேட்டில் அந்த மெசேஜை அனுப்பிவிடலாம். அதுமட்டுமின்றி மிகப்பெரிய பைல்களை ஐ-கிளவுடில் சேவ் செய்துகொள்ளவும் முடியும் என்பதால், டேடா ரிசீவிங்கும் இதில் எளிதே. குறைந்த நேரத்தில் எளிதில் அனுப்ப முடியும் என்பதால், இதை அனைவரும் விரும்புவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லேப் டாப்களிலும் வாட்ஸ்-அப் வலம் வருவதால் மொபைல் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும் இதன் பயன்பாடு எளிதே.

ஃபேஸ்புக் வந்த பிறகு ஆர்குட், ஜி-மெயிலின் வருகைக்குப் பிறகு ஹாட் மெயில் போன்றவையெல்லாம் காணாமல் போன வரலாறு நாம் அறிந்ததே. எந்த வேலையையுமே மனிதன் எளிதாக செய்ய நினைப்பதால் தான் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகிறது. தந்தி சேவைக்கு இந்தியாவில் மூடுவிழா கண்டதுபோல வாட்ஸ்- அப்பின் இந்த முன்னேற்றங்களால் ஜி-மெயில் போன்ற இ-மெயில் தளங்களுக்கும் மூடுவிழா காணும் நாள் விரைவில் வந்துவிடும் என்று கணிக்கின்றனர் வல்லுநர்கள்.

கூகுளின் சி.இ.ஓ வான நம்ம ஊரு சுந்தர் பிச்சை இதை எப்படி டீல் பண்ணப் போறாரோ?

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)
நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...