Pages

Friday, March 4, 2016

ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி!

தஞ்சாவூரில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம், மிஷன் ஆப் ரேபிஸ் அமைப்பின் சார்பில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ரயிலடியில் தொடங்கிய பேரணியை ஆட்சியர் டாக்டர் என். சுப்பையன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். பிரதான சாலைகள் வழியே சென்ற பேரணி அரண்மனை திடலில் முடிவடைந்தது. இதில்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள்,செவிலியக் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்சிக்கு இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட பொருளாளர் முத்துக்குமார், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதன்மைக் கல்வி அலுவலர் இர. திருவளர்செல்வி, மிஷன் ஆப் ரேபிஸ் கல்விப் பிரிவு இயக்குநர் முருகன் அப்புப்பிள்ளை, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறைத் தலைவர் எம். சிங்காரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...